பொதுவாக குற்றத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவதை நாம் அறிவோம். ஆண் அல்லது பெண், வயதானவர், இளைஞர் என கைது செய்யப்பட்டவர்களின் பெயர் வரும். ஆனால், இம்முறை கொலைக்குற்ற வழக்கு ஒன்றில் மாடு கைது செய்யப்பட்டிருக்கிறது. கேட்க ஆச்சரியமாக இருந்தாலும் காவல்துறையினர் இதனை உறுதி செய்துள்ளனர். மாடு மற்றும் அதன் உரிமையாளர் இருவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | Viral Video: சேவல் முதுகில் ஒய்யாரமாக சவாரி செய்யும் பூனை
இந்த சம்பவம் தெற்கு சூடானில் இருக்கும் லெக்ஸ் மாகாணத்தில் நடைபெற்றுள்ளது. அங்கு இருக்கும் ஒரு பண்ணையின் அருகே சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது மாடு முட்டியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாடு மற்றும் அதன் உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது மாடு ராம்பெக் சென்ட்ரல் கவுண்டி காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
விநோதமான வழக்கு என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அங்கு இதற்கு முன்பு செம்மறி ஆடு கைது செய்யப்பட்ட வரலாறு இருக்கிறது என்பதால் இது புதிதல்ல. அதாவது, 45 வயதுடைய பெண்ணைக் கொன்ற புகாரில் செம்மறி ஆடு கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, செம்மறி ஆட்டுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். இதனைத் தொடர்ந்து செம்மறி ஆடு சிறையில் அடைக்கப்பட்டது. அந்நாட்டு சட்டத்தின்படி ஆடு அல்லது மாடு போன்ற விலங்குகள் கைது செய்யப்பட்டால், தண்டனைக் காலம் முடிந்தபிறகு அவை உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடாக கொடுக்கப்படும்.
மேலும் படிக்க | பச்சோந்தி நிறம் மாறுவதை பார்த்துள்ளீர்களா - வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR