சிறுத்தை குட்டிக்கு பால் கொடுக்கும் சிம்பன்சி: வைரல் வீடியோ

சிறுத்தை குட்டிக்கு பால் கொடுக்கும் சிம்பன்சி குரங்கின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 4, 2023, 07:54 PM IST
  • சிறுத்தை குட்டிக்கு பாலூட்டும் சிம்பன்சி
  • மனதை நெகிழ வைக்கும் வீடியோ
  • 4 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகள்
சிறுத்தை குட்டிக்கு பால் கொடுக்கும் சிம்பன்சி: வைரல் வீடியோ title=

’அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ்’ என்பதற்கு ஏற்ப சிம்பன்சி குரங்கின் மடியில் படுத்து சிறுத்தை குட்டி ஒன்று பால் குடிக்கும் காட்சி காண்போரை நெகிழ வைத்துள்ளது. டிவிட்டரில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலாகியுள்ளது. வெளிநாட்டில் இருக்கும் விலங்குகள் பூங்காவில் இருந்து தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இருப்பதைவிட சில விதிவிலக்குகளுடன் விலங்குகள் அங்கு வைத்து பராமரிக்கப்படுகின்றன. அந்தவகையில் சிங்கம், புலி மற்றும் கரடி குரங்கு எல்லாம் ஒரே பூங்காவில் வைத்து பராமரிக்கப்படுகிறது. அதனால், அங்கு ஒன்றாக இருக்கும் விலங்குகள் தங்களின் இயல்பில் இருந்து விலகி மற்ற விலங்குகளுடன் ஜாலியாக பழகிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருக்கின்றன. 

மேலும் படிக்க | தூக்க சொன்னா தூக்கிப்போடற? மணமகனை கலாய்த்த ஃப்ரெண்ட்ஸ், தொப்பென்று விழுந்த மணமக்கள்: வைரல் வீடியோ

அப்படிதான் சிம்பன்சி குரங்கும் அங்கு இருக்கும் மற்ற விலங்குகளுடனும் அவற்றின் குட்டிகளுடன் விளையாடுகிறது. அன்பை அளவில்லாமல் பொழியும் அந்த சிம்பன்சி, சின்ன குட்டிகளுடன் தன்னுடைய தாய் பாசத்தையும் பகிர்ந்து கொள்கிறது. வைரலாகியிருக்கும் வீடியோவில் பார்த்தால் சிம்பன்சி குரங்கின் அன்பு உங்களுக்கு தெளிவாக புரியும். சிறுத்தை குட்டி ஒன்று ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கும்போது, சிம்பன்சியும் கொஞ்சி குலாவுகிறது. இரண்டும் முத்த மழை பொழிந்து கொண்டிருக்கும் சமயத்தில் புலிக் குட்டிக்கு பசி ஏற்பட்டுவிட்டதை கண்டுபிடிக்கிறது. உடனே குழந்தைகளுக்கு கொடுக்கும் பால் புட்டியில் பாலை எடுதுக் கொண்டு வரும் சிம்பன்சி குரங்கு, சிறுத்தை குட்டியை மடியில் படுக்க வைத்து பாலூட்டுகிறது.

இந்த காட்சி காண்பதற்கு கண்கொள்ளா காட்சிபோல் இருக்கிறது. பால் கொடுத்து முடித்தவுடன் தாலாட்டி சீராட்டி தூங்க வைக்கிறது. காண்போர் நெஞ்சை குளிர வைக்கும் சிம்பன்சியின் இந்த செயலை பார்த்து பலரும் பாராட்டுகளையும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த அன்பும், தாய்பாசமும் உண்மையிலேயே மனிதர்கள் கூட பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர். டிவிட்டரில் @TansuYegen என்ற பக்கத்தில் வீடியோ பகிரப்பட்டிருக்கிறது. இதுவரை மொத்தம் 4 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை இந்த வீடியோ பெற்றுள்ளது. இதுவே இந்த வீடியோவுக்கு பார்வையாளர்கள் கொடுத்திருக்கும் அங்கீகாரம். 

மேலும் படிக்க | சின்னப்புள்ளையா இருக்கும்போது இப்படித்தானே விளையாடினீங்க? ஞாபகம் வருதே.... வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News