Brothers Love பாச மலர்களா என்று கேட்க வைக்கும் குட்டி பையன்களின் வீடியோ

பள்ளியிலிருந்து வரும் அண்ணனை பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் குட்டித் தம்பியின் வீடியோவை பாக்க கண் கோடி வேண்டும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 24, 2022, 05:40 PM IST
  • பாசமலர் நவீன வீடியோ
  • அண்ணன் தம்பி பாசம்
  • பாசத்தில் அண்ணனை அசத்தும் தம்பி
Brothers Love பாச மலர்களா என்று கேட்க வைக்கும் குட்டி பையன்களின் வீடியோ title=

Viral Video: அண்ணனுக்காக பாசத்துடன் காத்திருப்பது எல்லாம் பழைய காலம் என்று பெற்றவர்கள் சொல்லி அங்கலாய்ப்பதை கேட்டிருக்கலாம். இந்த வீடியோ அந்த ஆதங்கங்களை எல்லாம் அடித்து துவைத்துவிடும் பாச வீடியோ. குழந்தைகளின் பாசத்தை பார்த்து சமூக வலைதளங்களில் நெகிழ்வான பதிவுகள் பரவலாக பதியப்பட்டு வருகிறது.

பள்ளியில் இருந்து வரும் அண்ணனை எதிர்பார்த்து காத்திருக்கும் தம்பியின் வீடியோ இது. வைரலாகி வரும் வீடியோவில், பள்ளிப் பேருந்துக்காக சாலையில் காத்து நிற்கும் சிறுவன் பரபரப்புடன் காத்துக் கொண்டிருக்கிறான்.

தொலைவில் பள்ளிப் பேருந்து வருவதை பார்த்தவுடனேயே,  குழந்தை மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது. அந்த குதூகலம், தம்பியின் பாசத்தை காட்டுவதாக இருப்பதால், பார்ப்பவர் எல்லாம் தொடர்ந்து இந்த வீடியோவை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

வைரலான பாசக்கார தம்பியின் வீடியோவை இங்கே பார்க்கலாம்:

 

இந்த வீடியோவை பலரும் தொடர்ந்து பார்த்துக் கொண்டேயிருக்கின்றனர். இந்த வீடியோ. வெளி வந்த சில வினாடிகளில் பலரும் பார்த்து, வைரலாக்கிவிட்டனர். வைரலாகும் வீடியோவில் அண்ணனின் பள்ளிப் பேருந்து வரவுக்காக குழந்தை நீண்ட நேரம் காத்திருப்பதைக் காணலாம். 

பள்ளிப் பேருந்து வரும் ஹாரன் சத்தம் கேட்டதும், குட்டிப் பையனின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு துள்ளி குதிக்கிறார்.

பள்ளி பேருந்தை பார்த்ததும் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் தம்பி
பள்ளிப் பேருந்தை தூரத்திலிருந்து பார்த்தவுடன் அந்தச் சிறுவன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்ததைக் காணலாம். பள்ளிப் பேருந்து அவன் அருகில் வர, அவனது மகிழ்ச்சி மேலும் மேலும் அதிகரிக்கிறது. 

மேலும் படிக்க |  Funny Video: நானும் குயவன் தான்; அசத்தும் கியூட் பூனை

பேருந்து வந்து நின்றவுடன் அவனது மகிழ்ச்சி பன்மடங்கு அதிகரித்தது. ஜன்னலோர இருக்கையில் அண்ணன் அமர்ந்திருப்பதைப் பார்த்து, உலகத்தில் உள்ள சந்தோஷம் எல்லாம் கிடைத்துவிட்டதைப் போல் ரியாக்ட் செய்யும் குழந்தையின் முகபாவங்கள் அற்புதமாய் இருக்கிறது.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்று சொல்வதை உண்மையாக்கும் வீடியோ இது. தம்பியின் பாசத்துக்கு உரிய அண்ணன், பேருந்தில் இருந்து இறங்கியதும் ஓடி வந்து தம்பியை கட்டிப் பிடிக்கிறான்.

தம்பியை அண்ணன் தட்டிக்கொடுத்தால், சுட்டித் தம்பியும் அண்ணனின் முதுகில் தட்டிக் கொடுக்கிறான். சிவப்பு உடை போட்ட பாசக்கார தம்பியின் பாசம் சமூக ஊடகங்களில் வைரலாகிறது. அட்டகாசமான பாசம் என்று சிலர் பதிவிட்டால், அன்புக்கு அண்ணன், ஆசைக்கு தம்பி என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் இந்த வீடியோவை மிக ரசித்து பகிர்ந்து கொண்டதால், இந்த வீடியோ மிகவும் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவின் கமெண்ட் பகுதி முழுவதுமே மகிழ்ச்சியை காட்டும் எமோஜிகளால் நிரம்பியுள்ளது.

மேலும் படிக்க | மானை இறுக்கும் மலைப்பாம்பு; சிக்கித் தவிக்கும் மான்... ஆனால்... நடந்தது என்ன..!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News