“என்னது மியாவ் மியாவ்-ஆ?” பூனை போல கத்தும் சிறுத்தை..! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்..!

Viral Video Of Cheetah: அதிபயங்கர விலங்குகளுள் ஒன்றாக கருதப்படும் சிறுத்தைகள் பூனை போல கத்துவதை பார்த்துள்ளீர்களா..? இதோ வைரல் வீடியோ..!   

Written by - Yuvashree | Last Updated : Sep 14, 2023, 05:17 PM IST
  • பூனை குடும்பத்தை சேர்ந்த வன விலங்கு சிறுத்தை.
  • இவை அதிபயங்கர வேட்டை விலங்குகளுள் ஒன்று.
  • சிறுத்தை ஒன்று ‘மியாவ் மியாவ்’ என்று கத்தும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
“என்னது மியாவ் மியாவ்-ஆ?” பூனை போல கத்தும் சிறுத்தை..! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்..! title=

‘பெரிய பூனை’ என்று கருதப்படும் விலங்கு, சிறுத்தை. இதை, ஆஃப்ரிக்கா மற்றும் மத்திய இரான் நாடுகளில் பார்க்கலாம். உலகில் இருப்பதிலேயே மிகவும் வேகமாக ஓடக்கூடிய விலங்கு இதுதான். இது, மணிக்கு 80 முதல் 98 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடுமாம். இதன் கால்கள்,வால் உள்பட, உடல் பாகங்கள் அனைத்துமே அவ்வாறு வேகமாக ஓடுவதற்காக வடிவமைக்க பட்டதாக இருக்குமாம். 

இதை ஆங்கிலத்தில் Cheetah என்று அழைப்பார்கள். இவை மூன்று குழுக்களாக பிரிந்து வாழும். பெண் சிறுத்தைகள் தங்களது குட்டிகளுடன் வாழும். பெண் சிறுத்தைகள்தான் தாங்கள் இருக்கும் இடத்திற்கு அருகிலேயே விலங்குகளை வேட்டையாடும். ஆண் சிறுத்தைகள் தொலைதூரத்திற்கு சென்று வேட்டையாடும். ஆண் சிறுத்தைகள் பகலில் ஆக்டிவாக இருக்குமாம். இதில், நன்கு வளர்ந்த சிறுத்தைகள் 21 முதல் 72 கிலோ வரை எடையுடன் இருக்குமாம். தன் இரையை 60 முதல் 100 மீட்டர் இடைவெளியில் இருந்து தள்ளியிருந்து கவனிக்கும் அளவிற்கு இவற்றிற்கு கண் பார்வை சக்தி அதிகம். 

பூனை குடும்பத்தை சேர்ந்தது..

வீட்டில் வளர்க்கும் பிராணிகளுள் ஒன்று பூணை. இவற்றில் ஒரு சில பூணைகள் சாதுவாக இருக்கும். ஒரு சில வகை பூணைகள் தனது ஓனரையே பாடாய் படுத்தும். உருவத்தில் குட்டியாக இருக்கும் பூணைகளுக்கே இந்த அளவிற்கு ஆக்ரோஷ சக்தி இருக்கும் போது, இதன் குடும்பத்தை சேர்ந்த காட்டு விலங்குகளுக்கு எந்த அளவிற்கு இருக்கும்..? பூனை குடும்பத்தை சேர்ந்த பல விலங்குகள் காட்டு விலங்குகளாக இருக்கின்றன. அவற்றில் சில அதிபயங்கர வேட்டையாடும் விலங்குகளாக வாழ்கின்றன. புலி, சிங்கம், சிறுத்தைகள், காட்டுப்பூனை என பல விலங்குகள் பூனை குடும்பத்தை சேர்ந்தவை. 

பூனை போல கத்தும் சிறுத்தை..

காட்டு விலங்குகள் கர்ஜனை செய்யும் என்பதை அறிவோம். ஆனால் அவற்றில் சில பூனை போல கத்தும் என்பதை கேள்வி பட்டதுண்டா..? ஆம், பூனை குடும்பத்தை சேர்ந்த சில காட்டு விலங்குகள் பூனை போல ‘மியாவ் மியாவ்’ என குரல் எழுப்பும். ஆனால், இவை மிகவும் அறிய நிகழ்வாகவே நடக்கும். இதை ஒருவர் வீடியோவாக தனது இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். 

ஒரு சிறுத்தை பூனையை விட மிகவும் அழகாக ‘மியாவ் மியாவ்’ கூறும் வீடியோ தற்போது இணையத்தில் நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவிற்கு பலர் லைக்ஸ்களையும் கமெண்டஸ்களையும் குவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | Viral Video: துரத்தும் முதலை... மானின் உயிர் போராட்டம்... 1 நிமிட த்ரில்லர் வீடியோ!

சிறுத்தைகளுக்கு உடம்பெல்லாம் புள்ளிகள் இருப்பதற்கு காரணம் என்ன..?

பெரும்பாலான சிறுத்தைகளுக்கு உடல் முழுவதும் கரும்புள்ளிகள் இருக்கும். இது ஏன் என்று யோசித்ததுண்டா..? இது போன்ற கரும்புள்ளிகள், அதற்கு தன்னை சுற்றியிருக்கும் இடத்துடன் எளிமையாக கலந்து விட உதவி புரிகிறது. தனது இரையை தாக்குவதற்கு முன்னர் பதுங்குவதற்கு இந்த கரும்புள்ளிகள் உதவுகிறது. ஆப்ரிக்க நாட்டில் மட்டும் மொத்தம் 7,500 முதல் 10,000 சிறுத்தைகள் வரை நடமாடுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் சிறுத்தைகள் அழிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், தென் ஆப்ரிக்காவில் இருந்து வரவழைத்த 12 சிறுத்தைகள் தற்போது மத்திய பிர்தேசத்தில் வாழ்ந்து வருகின்றன. 

மேலும் படிக்க | Viral Video: தேன் மிட்டாய் பிரியர்கள் இந்த வீடியோவை பார்க்காதீங்க... ப்ளீஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News