சமூக வலைதளங்களை கண்காணிக்கும் திட்டத்தை திரும்ப பெற்ற மத்திய அரசு

சமூக வலை தளங்களை கண்காணிக்கும் திட்டத்தை கைவிட்ட மத்திய அரசு

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 3, 2018, 07:19 PM IST
சமூக வலைதளங்களை கண்காணிக்கும் திட்டத்தை திரும்ப பெற்ற மத்திய அரசு title=

வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உட்பட சமூக வலை தளங்களை கண்காணிக்க தனியாக மையம் அமைக்கப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவித்திருந்தது. இதனையடுத்து மத்திய அரசின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த மாதம் ஜூலை 13 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. 

அப்பொழுது உச்சநீதிமன்றம், இந்திய மக்களின் வாட்ஸ்-அப் செய்திகளை மத்திய அரசு கண்காணிக்க விரும்புகிறது. இதற்காக ஒரு கண்காணிப்பு நிலையை ஏற்படுத்துகிறது. இதுக்குறித்து தெளிவுபடுத்த மத்திய அரசாங்கத்தை கேட்டுக்கொண்டதோடு, இதுக்குறித்து 2 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இந்த திட்டத்தை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கபட்டது.

Trending News