முதலையின் வாய்க்குள் சென்று உணவை திருடிய கில்லாடி பூனை: திக் திக் வைரல் வீடியோ

Cat Funny Video: இந்த வீடியோவை பார்த்தால் உங்கள் கண்களையே உங்களால் நம்ப முடியாது. பூனை ஒன்று முதலையிடம் காட்டிய மாஸ் துணிச்சலின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 17, 2023, 12:27 PM IST
  • விலங்குகள் தொடர்பான பல்வேறு வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தினமும் பகிரப்படுகின்றன.
  • சிங்கம், புலி, குரங்கு, நாய், பூனை, யானை, பாம்பு என இந்த விலங்குகளின் பெரும்பாலான வீடியோக்கள் இணையத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
  • இவற்றில் காணப்படும் சில காட்சிகள் நம்மை முற்றிலும் வியக்க வைக்கின்றன.
முதலையின் வாய்க்குள் சென்று உணவை திருடிய கில்லாடி பூனை: திக் திக் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

காட்டு விலங்குகள் தொடர்பான பல்வேறு வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தினமும் பகிரப்படுகின்றன. சிங்கம், புலி, குரங்கு, நாய், பூனை, யானை, பாம்பு என இந்த விலங்குகளின் பெரும்பாலான வீடியோக்கள்  இணையத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவற்றில் காணப்படும் சில காட்சிகள் நம்மை முற்றிலும் வியக்க வைக்கின்றன. 

தற்போது மீண்டும் ஒரு பூனை மற்றும் முதலை தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காணப்படும் காட்சியை கண்டிப்பாக நம்மால் நம்ப முடியாது. இதில் முதலை ஒன்று தண்ணீரில் இருந்து வெளியே வநது தரையில் கிடப்பதைக் காண முடிகின்றது. அது இரையை வாயில் வைத்துள்ளது. சில நொடிகளுக்குப் பிறகு ஒரு பூனை அங்கு வந்து, முதலையின் வாயிலிருந்து இரையை பிடுங்கிவிடுகிறது. 

மேலும் படிக்க | குறும்பா! அது கிலோ என்ன விலை? பவ்யமாய்  

மாஸ் காட்டிய பூனை

வைரலான இந்த வீடியோவில், எந்தவித அச்சமுமின்றி பூனை முதலையின் அருகில் சென்று அதன் வாயில் புதைத்து வைக்கப்பட்டிருந்த உணவை ரகசியமாக இழுக்கத் தொடங்கி அதில் வெற்றியும் காண்பதை காண முடிகின்றது. பூனை செய்த வேலை முதலைக்கு புரிந்து அது சுதாரிப்பதற்கு முன், பூனை தனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு ஓடி விடுகிறது. பூனை இந்த சாகச செயலை செய்யும்போது முதலை மிகவும் மந்தமாக காட்சியளிக்கிறது. பொதுவாக, முதலைகள் மிகவும் ஆபத்தான உயிரினங்கள். சிறிய விலங்குகள் பெரிய விலங்குகள் என அனைத்து விலங்குகளும் அதன் அருகில் செல்லக்கூட தயக்கம் காட்டுகின்றன. இந்த நிலையில், ஒரு பூனை முதலைவின் வாயிலிருந்து அதன் உணவை பிடுங்கி, எடுத்துச்சென்றது காண்பவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

கில்லாடி பூனையின் வைரல் வீடியோவை இங்கே காணலாம்:

முதலையின் வாயில் இருந்து பூனை உணவை எடுத்த விதம் இணையத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ comedy_reels_meme என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை மில்லியன் கணக்கான வியூஸ்களையும் ஏகப்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

‘அப்படித்தான் இருக்க வேண்டும்.. நமக்கு வேண்டியதை நாம் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என ஒரு பயனர் எழுதியுள்ளார். ‘துணிந்தவனுக்கே வெற்றி’ என மற்றொரு பயனர் கமெண்ட் செய்துள்ளார்.

மேலும் படிக்க | Viral: ஸ்டண்ட் செய்து சிதறிய கார்... சினிமாவை மிஞ்சும் ரியல் வீடியோ! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News