ஆரம்பம் அஜித்தை போல் பார்வையில் மிரட்டும் பூனை!

பூனைக்குட்டி ஒன்று பெரிய பூனைக்கு தெரியாமல் அதனை அடிக்க முயற்சி செய்து பின்னர் வடிவேலு போல பம்மிக்கொண்டு ஒன்றும் தெரியாத அப்பாவி போல நடிக்கும் ஒரு நகைச்சுவையான வீடியோ வைரலாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Oct 5, 2022, 12:01 PM IST
  • பதுங்கி நின்று அடிக்க வரும் பூனை.
  • ஒரே பார்வையில் ஓட வைத்த மற்றொரு பூனை.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
ஆரம்பம் அஜித்தை போல் பார்வையில் மிரட்டும் பூனை! title=

இணையத்தில் தற்போது வைரலாகி கொண்டிருக்கும் ஒரு வீடியோ விலங்கு பிரியர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கும் வீடியோவாக கட்டாயம் இருக்கும்.  விலங்குகள் செய்யும் செயல்களை நம்மால் எப்போதுமே நேராக பார்க்கமுடியாது, நாம் கற்பனை செய்து பார்த்திடாத வகையிலான சம்பவங்களை கூட இணையத்தில் கண்டு ரசிக்கிறோம்.  அதில் விலங்குகள் மற்றும் குழந்தைகள் வீடியோ என்றால் பாரபட்சமின்றி அனைவருக்கும் பிடிக்கும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் இந்த வகையான காட்சிகளை மிகவும் ஆர்வமாகவும், உற்சாகமாகவும் கண்டு களிப்பார்கள்.  அப்படி இப்போது பலரும் உற்சாகமாக கண்டுகளிக்கும் வகையில் தான் ஒரு க்யூட்டான வீடியோவை பார்க்க போகிறோம்.

மேலும் படிக்க | பிரதர்னு கூப்புடாதிங்க - மனசே வலிக்குது; நஸ்ரியாக்களை எச்சரிக்கும் ஊபர் ஓட்டுநர்

இப்போதெல்லாம் அதிகமாக குறும்பு செய்யும் விலங்கு வகைகளில் பூனைக்கு தான் முதலிடம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் அதிகளவில் பூனைகள் தான் இப்போது சேட்டை செய்கின்றது.  ஆனால் அவை செய்யும் சேட்டைகள் நமக்கு எரிச்சலடைய செய்வதில்லை மாறாக நமது சோர்வை நீக்கி புத்துணர்வு தரும் விதமாகவே அமைந்திருக்கிறது.  தற்போது இங்கு வைரலாகி வருவதும் ஒரு பூனையின் காட்சி தான், அந்த காட்சி ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில் ஒரு பெரிய பூனை அமைதியாக அமர்ந்து இருக்கிறது, அப்போது ஒரு குட்டி பூனை அதற்கு தெரியாமல் அதனை அடிப்பதற்காக வருகிறது.  அப்பொழுது அந்த பெரிய பூனை திடீரென்று திரும்பி பார்த்தது என்ன செய்வதென்று அறியாத பூனைக்குட்டி சுவற்றை சுரண்டிக்கொண்டும் பின்னர் அந்த இடத்தை விட்டு மெதுவாக பம்மிக்கொண்டே நகர்ந்து சென்றுவிடுகிறது.

 

எதிரிகளை தக்க முயன்று அவர்களிடம் மாட்டிக்கொண்டதும் வடிவேலு எப்படி நகைச்சுவையாக சமாளிப்பாரோ அதேபோல இந்த பூனைக்குட்டியும் சமாளித்துக்கொண்டு அங்கிருந்து நகரும் காட்சி இணையத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.  இந்த நகைச்சுவையான வீடியோவிற்கு பல லைக்குகள், கமெண்டுகள் குவிந்ததோடு இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் படிக்க | பாவம்! நடுரோட்டில் முன்னாள் காதலியுடன் காதல் செய்த செயல்: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News