ஜான் சீனா போல் எகிறி அடித்து மாஸ் காட்டும் பூனை! வைரல் வீடியோ!

குத்துச்சண்டை போன்று பூனை ஒன்று ஒரே அடியில் நாயின் கழுத்தை திருகி தலைகீழாக தூக்கிப்போட்டு கெத்தாக நடந்து செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Nov 7, 2022, 09:36 AM IST
  • அமைதியாக படுத்து இருக்கும் பூனை.
  • கிட்டே சென்று வம்பிழுக்கும் நாய்.
  • அடித்து பறக்கவிட்ட பூனை வீடியோ வைரல்.
ஜான் சீனா போல் எகிறி அடித்து மாஸ் காட்டும் பூனை! வைரல் வீடியோ! title=

குத்துச்சண்டை  நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒன்று, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  கேன், அண்டர்டேக்கர், ட்ரிப்பிள் ஹெச், ராக், ஹல்க் போன்ற பலர் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் குத்துச்சண்டை வீர்ர்கள் ஆவார்கள்.  இந்த நிகழ்ச்சியை பார்த்து பலரது வீடுகளிலும் உள்ள குழந்தைகள் தங்களை குத்துச்சண்டை வீரர்கள் போல பாவித்து செய்யும் செயல்களை எல்லாம் நாம் பார்த்து ரசித்திருக்கிறோம்.  மனிதர்கள் தான் இப்படி செய்கிறார்கள் என்று பார்த்தால் விலங்குகளும் கூட இதுபோன்று செய்வது பார்ப்பதற்கு ஆச்சர்யமாக இருக்கிறது.  தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் பூனை குத்துச்சண்டை வீரரை போல நடந்துகொள்வது இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும் படிக்க | தூங்கிக்கொண்டே தலைகீழாக விழுந்த பூனை! வைரலாகும் வீடியோ! 

இந்த வீடியோவானது ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது, அந்த வீடியோவில் ஒரு பூனை ஒன்று அமைதியாக தரையில் அமர்ந்து இருக்கிறது.  அந்த பூனையை வம்பிழுப்பது போன்று அதற்கு எதிரே கருப்பு நிறத்தில் ஒரு நாய் நின்று கொண்டிருக்கிறது.  இதனால் கடுப்பான பூனை வெகுண்டெழுந்து அந்த நாயின் கழுத்தை ஒரே திருகில் திருகி தலைகீழாக கீழே தூக்கி அடித்துவிட்டு கெத்தாக அந்த பூனை நடந்து செல்கிறது.  இந்த காட்சி இணையவாசிகளை பெரிதும் கவர்ந்து இருக்கிறது, திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் வகையில் இந்த வீடியோ அமைந்திருக்கிறது.

 

இந்த வீடியோவிற்கு கொடுக்கப்பட்டுள்ள பின்னணி இசை இதற்கு கூடுதல் வலு சேர்த்திருக்கிறது, இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்திருக்கின்றனர்.  மேலும் இந்த வீடியோவிற்கு பல லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்துள்ளது.

மேலும் படிக்க | Viral News: கையில் சுற்றிய நாகப்பாம்பை கடித்து குதறி கொன்ற 8 வயது சிறுவன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News