இந்த skincare முகமூடிக்கு பின் மறைந்திருக்கும் நடிகை யார் தெரியுமா?

இந்த சரும பராமரிப்பு முகக்கவசத்திற்கு பின் மறைந்திருக்கும் நடிகை யார் தெரியுமா? இவர் மிகவும் பிரபல நடிகை. வெள்ளித்திரையில் அழகாக தோன்றும் இந்த நடிகை, LED mask அணிந்த புகைப்படத்த்தை தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த LED முகமூடி அவரது சருமத்திற்கு அழகைக் கூட்டினாலும், பார்க்கும் பலரை பயமுறுத்துகிறது. சரி இந்த அழகிய நடிகை யார் என்று யூகிக்க முடிகிறதா? 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 18, 2021, 12:36 AM IST
  • இந்த முகமூடிக்கு பின் மறைந்திருக்கும் நடிகை யார்?
  • அழகுக்கு இந்த எல்.ஈ.டி சிகிச்சை அவசியமா?
  • பக்கவிளைவுகள் இல்லாத சிகிச்சை இது
இந்த skincare முகமூடிக்கு பின் மறைந்திருக்கும் நடிகை யார் தெரியுமா? title=

இந்த சரும பராமரிப்பு முகக்கவசத்திற்கு பின் மறைந்திருக்கும் நடிகை யார் தெரியுமா? இவர் மிகவும் பிரபல நடிகை. வெள்ளித்திரையில் அழகாக தோன்றும் இந்த நடிகை, LED mask அணிந்த புகைப்படத்த்தை தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த LED முகமூடி அவரது சருமத்திற்கு அழகைக் கூட்டினாலும், பார்க்கும் பலரை பயமுறுத்துகிறது. சரி இந்த அழகிய நடிகை யார் என்று யூகிக்க முடிகிறதா? 

தற்போது இந்த LED mask சரும சிகிச்சையை பலரும் எடுத்துக் கொள்கிறார்களாம்…  

தீபிகா படுகோனே (Deepika Padukone) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிடுகிறார். திரைப்படங்களில் மட்டுமல்ல, சமூக உடகங்களிலும் அவரை பிரபலமாக ஆக்குகிறது இந்த பதிவுகள். தனது வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு, அவரது சமையல் திறன்கள், அவரது தோல் பராமரிப்பு உட்பட பல விஷயங்களை தனது சமூக ஊடக பக்கங்களில் பேசுகிறார். சனிக்கிழமையன்று, தீபிகா ஒரு தோல் பராமரிப்பு சிகிச்சையில் ஈடுபடுவதை தனது ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொண்டார்.  

Also Read | தொல்பொருள் பொக்கிஷமான எகிப்து வெளிப்படுத்தும் புதிய தொல்லியல் உண்மை

எல்.ஈ.டி லைட் தெரபி என்று அழைக்கப்படும் இது ஒரு தோல் பராமரிப்பு சிகிச்சையாகும், இது சிவப்பு மற்றும் நீலம் உள்ளிட்ட ஒளியின் மாறுபட்ட அலைநீளங்களைப் பயன்படுத்துகிறது. எல்.ஈ.டி முகமூடியுடன் முகத்தை மறைத்துக் கொண்டு, செல்ஃபி (selfie) எடுத்துக் கொண்டார் தீபிகா படுகோனே. அப்போது கருப்பு ஆடை அணிந்து, கலைந்து போன தலைமுடியுடன் இயல்பாக இருந்தார்.  

"Boo! #random." என்று அந்த புகைப்படத்திற்கு தீபிகா தலைப்புக் கொடுத்துள்ளார்.  

கீழே உள்ள புகைப்படத்தைப் பாருங்கள்:

முன்னதாக தீபிகா தனது தோல் பராமரிப்பு பற்றி பேசியிருந்தார், "நிறைய தண்ணீர் குடிப்பேன். அப்போதுதான் தோலில் வறட்சி ஏற்படாது. அதோடு, என் தோலில் அதிகமான தயாரிப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறேன். எனது சருமத்தை இயல்பாக வைத்திருக்கிறேன்" என்று தனது அழகுக்கான ரகசியத்தை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார் தீபிகா படுகோனே.

"நான் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு எனது மேக்கப் அனைத்தையும் அகற்றி, என் சருமத்தை சுத்தமாக வைத்திருப்பதில் மிகவும் கவனமாக இருப்பேன். நான் எவ்வளவு சோர்வாக இருந்தாலும் அல்லது என்னுடைய நாள் எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும், மேக்கப்பை சுத்தமாக கலைத்து விடுவேன்."

தற்போது, கபீர் கான் இயக்கிய '83’ இல் தீபிகா நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் ரோமி தேவ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் தீபிகா படுகோனே, இந்த திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராகவும் உருவெடுத்திருக்கிறார்.

அடுத்து, சித்தார்த் ஆனந்த் இயக்கும் ஃபைட்டர் திரைப்படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் (Hrithik Roshan) இணைந்து பணியாற்றப்போவதாக தீபிகா அறிவித்திருக்கிறார்.

Also Read | ’Tandav’ வலைத் தொடர் சர்ச்சை; I&B அமைச்சகம் சம்மன் அனுப்பியது

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News