watch: திருடும் போது முகத்தை மூட எதும் இல்லை; அதான் நிக்கர் யூஸ் பண்ணுனேன்..!

திருடும் போது தனது முகத்தை மறைக்க ஒரு திருடன் தனது உள்ளாடையை வைத்து முகத்தை மறைத்து திருடிய சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது..! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 27, 2018, 01:45 PM IST
watch: திருடும் போது முகத்தை மூட எதும் இல்லை; அதான் நிக்கர் யூஸ் பண்ணுனேன்..!  title=

திருடும் போது தனது முகத்தை மறைக்க ஒரு திருடன் தனது உள்ளாடையை வைத்து முகத்தை மறைத்து திருடிய சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது..! 

திருட்டின் போது தன்னுடைய தோற்றத்தை மறைக்க முகத்தில் உள்ளாடையை அணிந்து அலுவலகத்தில் நுழைந்த திருடனை டெக்ஸாஸ் போலீசார் தேடி வருகின்றனர். புதன்கிழமையன்று லியாந்தர் காவல்துறையினர் முகநூலில் ஒரு சி.சி.டிவி காட்சி அடங்கிய வீடியோவை வெளியிட்டிருந்தனர். அதில் திருடன் நீள நிற உள்ளாடையை அணிந்து கொண்டு ஜன்னல் வழியாக அல்வலகம் ஒன்றுக்குள் நுழையும் காட்சி பதிவாகியிருக்கிறது.

சில வினாடிகள் மட்டுமே ஓடுகின்ற அந்த சி.சி.டிவி காட்சிகளில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முகத்தை இரு உள்ளாடையால் மறைத்துக்கொண்டு கேமராவை பார்க்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. கமெண்ட் பிரிவில் பலரும், அந்த திருடன் அலுவலகம் முழுவதும் கைரேகையை விட்டுச் சென்றிருப்பதை சுட்டிக்கட்டியுள்ளனர்.

வீடியோ பகிரப்பட்டு ஒரு லட்சம் முறைகளுக்கு மேல் பார்க்கப்பட்டிருந்தாலும் அந்த திருடன் முகத்தை மறைத்துக்கொள்ள கையாண்டிருக்கும் வினோதமான முறை தான் சிரிப்பலைகளை ஏற்படுத்தி வருகிறது.

"திருடர்கள் எல்லாம் கால்சட்டைகளை முகமூடிகளாக பயன்படுத்திய காலங்கள் எல்லாம் போய்விட்டது" என ஒருவர் கமெண்ட் பிரிவில் கருத்து தெரிவித்திருந்தார். மற்றோருவர்," இது கேப்டன் அண்டர்பேன்ட்ஸ்" என நக்கலாக பதிவிட்டிருந்தார்.

திருடர்கள் இதுபோன்ற வினோதமான மாறுவேட முறைகளை கையாண்டு ரசிக்க வைப்பது, இது முதல்முறை அல்ல. சமீபமாக கன்னியாகுமரியில் ஒரு திருடன் தன்னுடைய முகத்தை மறைக்க தெளிவான பிளாஸ்டிக் கவரை அணிந்துள்ளான். அந்த கவரே அவரை எளிதாக காட்டிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. 

 

Trending News