Viral News: அனைவரையும் கவர்ந்த ₹1 கோடி மதிப்பிலான 'ஹள்ளிகார்' காளை..!!!

பெங்களூருவில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் விவசாயிகளுக்கான திருவிழாவான கிருஷி மேளாவில், மூன்றரை வயது மதிக்கத்தக்க கிருஷ்ணா என்ற காளை, அனைவரையும் கவர்ந்தது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 16, 2021, 06:37 PM IST
Viral News: அனைவரையும் கவர்ந்த ₹1 கோடி மதிப்பிலான 'ஹள்ளிகார்'  காளை..!!! title=

பெங்களூரு: பெங்களூருவில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் விவசாயிகளுக்கான திருவிழாவான கிருஷி மேளாவில், மூன்றரை வயது மதிக்கத்தக்க கிருஷ்ணா என்ற காளை, அனைவரையும் கவர்ந்தது. 

கிருஷி மேளாவில் கிருஷ்ணா காளைக்கு அலங்காரம் செய்யப்பட்டு  ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டது. இந்த காளையின் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய்.   இதன் ஒரு டோஸ் விந்து 1000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த காளை "அனைத்து கால்நடை இனங்களின் தாய்" என்று கருதப்படும் 'ஹள்ளிகார்' (Hallikar) இனத்தைச் சேர்ந்தது. இந்த இனத்தின் காளைகள் வலிமைக்கும், வண்டி இழுக்கும் திறனுக்கும் பொறுமைக்கும் பெயர் போனது. 

கர்நாடகத்தைச் (Karnataka) சேர்ந்த  இந்த மாட்டினங்கள் கர்நாடகத்தின் தென் மாவட்டங்களான மைசூர் மாவட்டம், மண்டியா மாவட்டம், ஹாசன் மாவட்டம் , தும்கூர் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் பாரம்பரியமாக வளர்க்கப்படுகிறது.இவற்றின் கொம்புகள் நீண்டு, பின்பக்கமாக சற்று வளைந்ததாக இருக்கும். இம்மாடுகள் சாம்பல் நிறமாக இருக்கும். 

ALSO READ | ‘மாடு பால் கொடுக்க மாடேங்குது’: போலீஸுக்கு வந்த வினோதமான புகார்

1 கோடி ரூபாய் விலை கொண்ட இந்தியாவில் (India) உள்ள காளைகளில் மிகவும் விலை உயர்ந்த காளைகளாகும். பொதுவாக, இங்கு நடத்தப்படும் கண்காட்சியின் போது காளைகள் 1 முதல் 2 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படும். இருப்பினும், இந்த குறிப்பிட்ட காளையின் விந்து அதிக மதிப்பு மிக்கது என்பதாலும், இதன் தேவை காரணமாக இதன் ஒரு டோஸ் விந்து 1000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

காளையின் உரிமையாளர் போரேகவுடா ANI இடம் இது குறித்து கூறுகையில், “ஒரு டோஸ் விந்துவை ரூ. 1,000க்கு விற்கிறோம்’ என்றார்.

ALSO READ | உங்களுக்கு 'OK' தானே: OK என்ற சொல் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்..!!

இந்த ஆண்டு, பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சி நவம்பர் 11 முதல் 14 வரை பெங்களூருவில் உள்ள ஜிகேவிகே வளாகத்தில் நடைபெற்றது. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து, நவீன விவசாயிகாக மாறிய பழங்குடியின பெண் கண்காட்சியை திறந்து வைத்தார்.

12,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் (Farmers) இந்த ஆண்டு கிருஷி மேளாவில் கலந்து பதிவு செய்தனர். அவர்களில் பலர் அந்த இடத்திலேயே பதிவு செய்துள்ளனர் என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இங்கே 550 ஸ்டால்கள் நிறுவப்பட்டிருந்தன. இதில் பாரம்பரிய மற்றும் கலப்பின பயிர் வகைகள், தொழில்நுட்பங்கள் மற்றும் இயந்திர பொருட்கள் கால்நடைகள், கடல் மற்றும் கோழி ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன எனஅறிக்கை மேலும் கூறியது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News