மணக்கோலத்தில் வாணி போஜன், ஷாக் ஆன ரசிகர்கள்; வீடியோ வைரல்

நடிகை வாணி போஜன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒரு வீடியோவால் அவரது ரசிகர்கள் ஷாக் ஆகிப் போயினர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 30, 2022, 02:32 PM IST
  • வாணி, மிக்கு மாத்ரமே செப்பிதா என்ற படத்தில் நடித்தார்
  • சமூக வலைதளங்களிலும் எப்போதுமே ஆக்டிவாக இயங்கி வருகிறார்
  • தனியார் தொலைக்காட்சிகளில் பல சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தார்
மணக்கோலத்தில் வாணி போஜன், ஷாக் ஆன ரசிகர்கள்; வீடியோ வைரல் title=

விமான பணிப்பெண்ணாக இருந்த வாணிபோஜன் சின்னத்திரையில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் உள்ளார். தற்போது இவர் பகைவனுக்கும் அருள்வாய், கேசினோ, பாயும் ஒளி நீ எனக்கு என்கிற திறைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தெய்வமகள் என்ற தொடர் மூலம் தமிழ் குடும்பங்கள் அனைவரின் மனதிலும் குறிப்பாக பெண்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் வாணி போஜன். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர், தனியார் தொலைக்காட்சிகளில் பல சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர்களின் வரிசையில் தற்போது சேர்ந்துள்ளார் வாணி போஜன், தொடர்களில் நடித்துக் கொண்டு இருக்கும் போதே பல வாய்ப்புகள் வந்தன.

மேலும் படிக்க | கொடிய நாகப்பாம்பை கூலாக காப்பாற்றிய நபர்: இணையத்தில் வைரல் ஆன வீடியோ 

சீரியல்கள் முடிந்ததும் தெலுங்கு படம் ஒன்றில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட வாணி, மிக்கு மாத்ரமே செப்பிதா என்ற படத்தில் நடித்தார். அதேபோல் தமிழில் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் இணைந்து நடிக்கும் படத்தில் வாணி போஜன் நடிக்கிறார். அண்மையில் வெளியான மகான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த வாணி, படத்தின் நீளம் காரணமாக அவர் நடித்த காட்சி நீக்கப்பட்டது.

இவ்வாறு பிசியான நடித்து வரும் வாணி போஜன், தனது சமூக வலைதளங்களிலும் எப்போதுமே ஆக்டிவாக இயங்கி வருகிறார். அதில் தனது வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதன்படி தற்போது இவருக்கு இன்ஸ்டாகிராமில் 20 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்கள் உள்ளனர்.

இந்நிலையில், தற்போது நடிகை வாணி போஜன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோவால் அவரது ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். அதனப்டி அவர் திருமண கோலத்தில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு திருமணம் நடைபெற இருப்பதாக கருதி வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் தான் அது விளம்பர ஷூட்டிங்கிற்காக போட்ட கெட் அப் என தெரியவந்தது. இத்னால் அவரது ரசிகரர்கள் சற்ற்ய் நிம்மதி அடைந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vani Bhojan (@vanibhojan_)

மேலும் படிக்க | நாகப்பாம்பை உயிருடன் விழுங்கும் ராட்சஸ பாம்பு; மனதை உலுக்கும் வைரல் வீடியோ..!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News