அட்ராசக்க அச்சச்சோ ஆன கதை: திருமணத்தில் தரமான சம்பவம்.. வைரல் வீடியோ

Funny Wedding Video: இந்த வீடியோவில் மிக வினோதமான ஒரு காட்சியை காண முடிகின்றது. இதை பார்த்தால் நமக்கு ஆச்சரியமே மேலோங்குகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 14, 2023, 03:52 PM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் bridal_lehenga_designn என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்கள் கிடைத்து வருகின்றன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
அட்ராசக்க அச்சச்சோ ஆன கதை: திருமணத்தில் தரமான சம்பவம்.. வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. திருமண வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

திருமணங்களின் இலட்சக்கணக்கான வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப்படுகின்றன. ஆனால் இவற்றில் சில திருமண வீடியோக்கள் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்று விடுகின்றன. இவை உடனே பலரால் பகிரப்பட்டு வைரலும் ஆகின்றன. திருமண வீடியோக்களில் நாம் பல வித காட்சிகளை காண்கிறோம். திருமணம் என்றாலே மகிழ்ச்சி, கோலாகலம் தான். இது மணமக்களின் வாழ்வில் மிக முக்கியமான தருணமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இரு குடும்பங்களின் சங்கமமாகவும் உள்ளது. பல உறவுகளும் நட்புகளும் சேர்ந்து மகிழ்ந்து அனுபவிக்கும் கோலாகலமான கொண்டாட்டமாக இது இருக்கின்றது.  சில சமயம் திருமண ஜோடிகள் அழகாக நடனமாடுவதையும், சில சமயம் காதல் வசனங்கள் பேசுவதையும், சில சமயம் முத்தங்களை பரிமாறிக்கொள்வதையும் நாம் பார்த்துள்ளோம். 

சமீப காலங்களில் மணமக்கள் வித்தியாசமான முறைகளில் மணமேடைக்கு எண்ட்ரி கொடுத்து அனைவரையும் அசத்துகிறார்கள். தற்போதும் அப்படி ஒரு எண்ட்ரி வீடியோ சமூக வலைதளங்களில் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதில், இருவரும் வழக்கமாக மணமக்கள் வருவது போல் காரிலோ அல்லது குதிரையிலோ வராமல், ஜேசிபியில் அமர்ந்து திருமணத்திற்கு பிரமாண்டமாக வருகின்றனர். 

 ஜேசிபியில் வந்த மணமக்கள் 

இன்றைய திருமணங்களில், மணமக்கள் தங்கள் எண்ட்ரி மிக வித்தியாசமாக அழகாக இருக்க வேண்டும் என அதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். இதற்காக மாதக்கணக்கில் பல ஏற்பாடுகளை செய்கிறார்கள். ஆனால் சில சமயங்களில் மணமகனும், மணமகளும் ஸ்வாகுடன் அசத்தலாக எண்ட்ரி கொடுக்க எண்ணி அது வேடிக்கைக்கான விஷயமாகவும் மாறி விடுவது உண்டு. 

இதே போன்ற ஒரு காட்சி சமீபத்திய வைரல் வீடியோவில் காணப்படுகின்றது. மணமகனும், மணமகளும் ஜேசிபி -யில் அமர்ந்து திருமண மண்டபத்திற்குள் நுழைவதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. தங்கள் தனித்துவமான எண்ட்ரியை பற்றி எண்ணி அவர்கள் மிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். விருந்தாளிகளும் இந்த வினோதமான எண்ட்ரியைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் சிறிது நேரம் கழித்து நிலைமை மோசமாகி, மணமக்கள் கீழே விழுகின்றனர்.

மேலும் படிக்க | Viral Video: தேன் மிட்டாய் பிரியர்கள் இந்த வீடியோவை பார்க்காதீங்க... ப்ளீஸ்!

ஜேசிபியே உடைந்தது

மணமக்கள் அமர்ந்திருந்த ஜேசிபி உடைந்த நிலையில், மணமகனும், மணமகளும் நேராக தரையில் விழுவதை வீடியோவின் முடிவில் நீங்கள் காண்பீர்கள். அவர்கள் விழுந்த விதத்தை பார்த்தால், அவர்களுக்கு அதிக காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்பதை தெளிவாக காட்டுகிறது. இருவரும் விழுவதை பார்த்து அங்கிருந்த விருந்தாளிகளும் அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள்.

அதிர்ச்சி அளிக்கும் வீடியோவை இங்கே காணலாம்:

வீடியோ இணையத்தில் வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் bridal_lehenga_designn என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்கள் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். சிலர் இந்த புதுமண ஜோடிக்காக பரிதாபப்பட்டாலும், சிலர், ‘இது தேவையா?’ என்று கமெண்ட் செய்துள்ளார்கள். ‘இந்த க்ரியேடிவிட்டி இங்கெ தேவையா?’ என ஒரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | Viral Video: துரத்தும் முதலை... மானின் உயிர் போராட்டம்... 1 நிமிட த்ரில்லர் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News