‘யாருப்பா நீ’: கீழே விழும் விமானத்தை கையில் பிடித்த சிறுவன், கடுப்பான நெட்டிசன்ஸ், வைரல் வீடியொ

Viral Video: ஒரு வீடியோவை பார்த்து இணையவாசிகள் கடுப்பாகி உள்ளனர். நம்ப வைத்து ஏமாற்றும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 30, 2022, 12:49 PM IST
  • விமான விபத்து தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
  • இதில் வானில் பறக்கும் விமானம் திடீரென சமநிலையை இழப்பதையும், அது விழும்போது சிறுவன் ஒருவன் அதை பிடிப்பதையும் காண முடிகின்றது.
  • வீடியோவில் நாம் காணும் காட்சி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
‘யாருப்பா நீ’: கீழே விழும் விமானத்தை கையில் பிடித்த சிறுவன், கடுப்பான நெட்டிசன்ஸ், வைரல் வீடியொ  title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 

சில சமயங்களில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் சில வீடியோக்கள் நம்மால் நம்பவே முடியாத அளவுக்கு இருப்பதுண்டு. பல சமயங்களில் ஒரு காட்சி பிரமிப்பாகத் தோன்றினாலும் அருகில் சென்றால்தான் அது கண்களை ஏமாற்றும் காட்சி என்று புரியும். விமான விபத்து தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் வானில் பறக்கும் விமானம் திடீரென சமநிலையை இழப்பதையும், அது விழும்போது சிறுவன் ஒருவன் அதை பிடிப்பதையும் காண முடிகின்றது. 

விமானத்தை அலேக்காக பிடித்த சிறுவன் 

சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், வானில் பறந்து கொண்டிருந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையை நோக்கி வேகமாக வருவதை முதலில் காண்கிறோம். அது பூமியில் விழப்போகிறது என்றே அனைவருக்கும் தோன்றுகிறது. ஆனால், அதற்கு பிறகு வீடியோவில் நாம் காணும் காட்சி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. 

மேலும் படிக்க | துரத்திய காளைகள், நம்ப முடியாத வகையில் தப்பித்த நபர்: வியக்க வைக்கும் வைரல் வீடியோ 

ஆகாயத்தில் காணப்படும் விமானம் ஒரு பொம்மை விமானம் என்பதும் அது அளவில் பெரியதாக இருப்பதால், நிஜ விமானத்தை போல தோன்றுகிறது என்பதும் பிறகுதான் புரிய வருகிறது. எனினும், வீடியோவில் காணும் காட்சி நம்மை உலுக்கி விடுகிறது. 

எங்கும் காண முடியாத காட்சி கொண்ட வீடியோவை இங்கே காணலாம்: 

வானில் பறக்கும் இந்த விமானத்தை ஒரு சிறுவன் ரிமோட் கொண்டு கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறான். இறுதியில், விமானம் அவர் நின்ற இடத்தில் விழுவதையும், சிறுவன் அதை இரண்டு கைகளாலும் பிடிப்பதையும் வீடியோவில் காண முடிகின்றது. இந்த வீடியோ videonation.teb என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பலவித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | நாங்களும் வாசிப்போம்ல, டிரம்ஸ் வாசிக்கும் யானை: வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News