Bizarre challenges: 7.5 லட்சம் ரூபாய் கொடுத்தால் பாம்புகளுடன் படுக்க தயார் சவாலுக்கு இளைஞன் ரெடி

"10,000 டாலர் கொடுத்தால் பாம்புகளுடன் இருப்பீர்களா?” என்ற கேள்வியுடன் தொடங்கும் வீடியோவை 30 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்த்திருக்கின்றனர். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Apr 14, 2021, 09:08 PM IST
  • லட்சம் ரூபாய் கொடுத்தால் பாம்புகளுடன் படுக்க தயாரா
  • நான் ரெடி என சவாலுக்கு தயாரான இளைஞன்
  • பார்த்தாலே அச்சமூட்டும் வீடியோ
Bizarre challenges: 7.5 லட்சம் ரூபாய் கொடுத்தால் பாம்புகளுடன் படுக்க தயார் சவாலுக்கு இளைஞன் ரெடி title=

"10,000 டாலர் கொடுத்தால் பாம்புகளுடன் இருப்பீர்களா?” என்ற கேள்வியுடன் தொடங்கும் வீடியோவை 30 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்த்திருக்கின்றனர். 1.2 மில்லியன் பேர் லைக் செய்துள்ளனர். பார்த்தவர்கள், உடனே வெறித்தனமாக பகிரும் வீடியோவாக மாறியுள்ளது இந்த பாம்புகளும், இளைஞனும் இருக்கும் வீடியோ.

இந்த பாம்பு ஸ்டண்டிற்குப் பிறகு, வீடியோவில் மேலும் பல விசித்திரமான சவால்களும் வருகின்றன. ஒரு பூச்சி உங்கள் மீது 30 விநாடிகள் ஊர்வது, கரப்பான் பூச்சிகளைக் கொண்ட ஒரு கொள்கலனில் இருந்து ரூபாய் நோட்டுகளைப் எடுப்பது, ஊறுகாய் நிறைந்த தொட்டியில் உட்கார்ந்து கொள்வது என விசித்திரமான சவால்களுடன் இந்த வீடியோ நிறைந்திருக்கிறது.

பார்த்தால் படையும் நடுங்கும் பாம்புடன் இருப்பதை நினைத்துப் பார்க்கவே பயமாய் இருக்கிறது என்றால், இந்த வீடியோவில் காணப்படும் இளைஞனோ, வண்ணமயமான பல பாம்புகளுடன் ஒரு தொட்டியில் உட்கார்ந்திருக்கிறார்.

அதற்கு லட்சக்கணக்கான ரூபாய் கொடுத்தால் போதும் என்று இந்த சவாலை ஏற்றுக் கொண்டு, சவாலை சமாளிக்கவும் செய்கிறார். பார்ப்பவர்களின் வயிற்றில் தான் புளி கரைக்கிறது. 

தைரியமான இளைஞர்களை தேடிப் பிடித்து இப்படி பல சவால்களை செய்ய வைக்கிறது யூடியூப் சேனல். பிரபல யூடியூப் சேனலான மிஸ்டர் பீஸ்ட் வெளியிட்ட இந்த வீடியோ சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில், அவர் வினோதமான சவால்களை முடித்த அனைத்து போட்டியாளர்களுக்கும் ஆயிரக்கணக்கான டாலர்களை வழங்குகிறார். இருப்பினும், வைரலாகிவிட்ட இந்த 14 நிமிட வீடியோ கிளிப் அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.  

ALSO READ | ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் காலமானார்

ஏப்ரல் 11 அன்று வெளியிடப்பட்ட இந்த யூடியூப் வீடியோவில், 22 வயதான யூடியூபர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். இவர், தனது நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு பணப் பரிசை வெல்ல தொடர்ச்சியான வினோதமான போட்டிகளை எதிர்கொண்டார்.  

பாம்புகள் நிறைந்த தொட்டியில் உட்கார ஒப்புக்கொண்டால், 10,000 டாலர் (சுமார் ரூ. 7.5 லட்சம்) தருவதாக அவர் தனது மூன்று நண்பர்களைக் கேட்டார். அவர்களில் இருவர் சவாலை முயற்சிக்க மறுக்கையில், மூன்றாவது நபர் அதை முயற்சித்து $ 10,000 ஐ மிகவும் தைரியமாகவும் எளிதாகவும் வென்றான்.

ALSO READ | பிரதமர் என்றால் விதிவிலக்கா என்ன; அதிரடி காட்டிய நார்வே போலீஸ் 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News