காதலரை கரம்பிடித்தார் பிக்பாஸ் புகழ் RJ வைஷ்ணவி - SeePics

இணையத்தை கலக்கும் பிக்பாஸ் புகழ் RJ வைஷ்ணவியின் திருமண புகைப்படங்கள்!!

Last Updated : Jun 16, 2019, 03:19 PM IST
காதலரை கரம்பிடித்தார் பிக்பாஸ் புகழ் RJ வைஷ்ணவி - SeePics title=

இணையத்தை கலக்கும் பிக்பாஸ் புகழ் RJ வைஷ்ணவியின் திருமண புகைப்படங்கள்!!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2வில் ஒரு கலக்கு கலக்கியவர் RJ வைஷ்ணவி. பிக் பாஸ் மற்ற பங்கேற்பாளர்களை விட எப்போதும் வித்யாசமாக தோன்றுபவர் வைஷ்ணவி. பிக் பாஸ் சீசன் 2 பார்த்த எவருமே வைஷ்ணவியை மறந்திருக்க முடியாது. பல சர்ச்சைக்கு  பிறகு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய வைஷ்ணவி ஓவியாவை பின் பற்றி தனது சிகை அலங்காரத்தையும் மாற்றி கொண்டார். அதோடு பிங்  கலராக ஹேர் கலரையும்  சேன்ஞ் செய்துவிட்டார் வைஷு.

விமானியாக பணிபுரிந்து வரும் அஞ்சான் ரவி அஞ்சான் ரவி என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார் வைஷ்ணவி. அஞ்சான் ரவி விமானியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது காதலரை மணமுடித்துள்ளார் வைஷ்ணவி. அதற்கான புகைப்படங்களை தனது சமூகவலைதளபக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இந்த ஜோடிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திருமணம்குறித்து கருத்து பதிவிட்டுள்ள வைஷ்ணவி, காதலை நிரூபிக்க ஆடம்பர கொண்டாட்டங்கள் தேவையில்லை என்றும் கூறியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் பயங்கர வைரலாக பரவி வருகிறது. 

 

Trending News