காதலன் - காதலி சண்டை; செல்போனால் மண்டையை உடைத்த காதலி

சிலருக்கு கோபம் உனர்ச்சி அதிகமாகும் போது ஆத்திரம் அடைந்து நிதானத்தையும், பொறுமையையும் இழந்து விடுவார்கள். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 24, 2021, 05:12 PM IST
காதலன் - காதலி சண்டை; செல்போனால் மண்டையை உடைத்த காதலி  title=

சிலருக்கு கோபம் உனர்ச்சி அதிகமாகும் போது ஆத்திரம் அடைந்து நிதானத்தையும், பொறுமையையும் இழந்து விடுவார்கள். அதனால், மற்றவர் மனதை காயப்படுத்தும் வகையில் கடினமான வார்த்தைகளை கூட பயன்படுத்துவார்கள். எதிரில் உள்ளவர்கள் தனக்கு நெருக்கமானவர்கள் என்றாலும் கோபத்தில் என்ன செய்கிறோம் என்றே தெரியாது. 

பல நேரங்களில் கோபத்தில், ஒரு நபர் தனது வாழ்நாள் முழுவதும் வருத்தப்படும் வகையிலான காரியம் ஒன்றையும் செய்யலாம். ஆனால், அதையெல்லாம் தாண்டி, ஒரு படி மேலே போய் 22 வயதான ரோக்ஸானா அடெலினா லோபஸ் (Roxana Adelina Lopez) கோபத்தின் காரணமாக கொலை செய்ததால், இன்று சிறையில் வாடுகிறார்.

ALSO READ | Viral News: 'விவாகரத்திற்கு' கிராண்ட் பார்டி கொடுத்த வினோத பெண்

அர்ஜென்டினாவின் லா நேசியனில் வசிக்கும் ரோக்ஸானாவுக்கும் அவரது காதலன் லூயிஸ் கான்டே (Luis Guantay)என்பவருக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. சண்டையில் காதலன் லூயிஸ் காதலியை தாக்கிய போது, அவள் பதிலுக்கு தன் காதலன் மீது தொலைபேசியை பலமாக வீசினாள். செல்போன் தலையில் பட்டதில் இருந்து லூயிஸ் என்பவருக்கு, தலைவலி மிகவும் அதிகமாகியது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

ALSO READ | அதிசயம்! இறந்த 45 நிமிடத்திற்கு பின் ‘உயிர்த்தெழுந்த’ பெண்..!! 

லூயிஸை டாக்டர்கள் பரிசோதித்தபோது, ​​அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர் ஆனால், அவரை காப்பாற்ற முடியாமல் அவர் இறந்தார். இதன் பின்னர், லூயிஸின் தாயார் காவல்துறையை அணுகி, மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். இதை அடுத்த மேற்கொண்ட விசாரணையில், இவர்களுக்கு இடையிலான சண்டை மற்றும் அடிதடி குறித்த விஷயங்கள் அம்பலமாகின. இதை அடுத்து, ரோக்ஸானா அடெலினா லோபஸ் கைது செய்யப்பட்டார். காதலி தற்காப்புக்காக தான் தாக்கினார் என வாதங்கள் வைக்கப்பட்டுள்ளன. 

தற்போது, இது குறித்த வழக்கு நடைபெற்று வருகிறது. தற்காப்புக்காக தாக்கியிருப்பதால், அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. எனினும், கோபம் காரணமாக, சந்தோஷமான வாழ்க்கை பறிபோயுள்ளது. காதலன் உயிரை இழந்துவிட்ட நிலையில், காதலி சிறை வாசம் அனுவித்து வருகிறாள். 

ALSO READ | Viral Video: நடுங்க வைக்கும் வீடியோ; இதயம் பலவீனமானவர்கள் பார்க்காதீர்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News