பகையாளியா பங்காளியா? குஸ்தி போடும் சிங்கங்களின் மூர்க்கச்சண்டை வீடியோ வைரல்

Lions Fighting Video Viral: பகையாளி சண்டையை விட பங்காளி சண்டை தான் பெரிசு! இந்த சொலவடையை நிரூபிக்கும் சண்டை வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. பலம் பொருந்திய சிங்கங்களுக்கு இடையில் சண்டை நடந்தால் என்னவாகும்? வீடியோ வைரலாகும்...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 27, 2023, 02:59 PM IST
  • சீற்றத்துடன் சண்டைபோடும் சிங்கங்கள்!
  • என்னை அசிங்கப்படுத்தாத! போதும் போதும் நிறுத்து
  • சிங்கச் சண்டைக்கு யார் பஞ்சாயத்து செய்ய?
பகையாளியா பங்காளியா? குஸ்தி போடும் சிங்கங்களின் மூர்க்கச்சண்டை வீடியோ வைரல் title=

Viral Lions: சமூக ஊடகங்களில் ரசிக்கப்படும் வீடியோக்களின் பட்டியலில், ‘விலங்குகள்’ வீடியோவுக்கு தனி மவுசு உண்டு. நமது வாழ்க்கையுடன் நீக்கமற கலந்து விட்ட சமூக ஊடகங்கள், தொழில்நுட்பத்தால் இயங்குகிறது என்பதே மறந்துபோகும் அளவுக்கு நம்முடன் ஒன்றிவிட்ட்டன. பற்பல அதிசயங்களையும் நமக்கு அறிமுகப்படுத்தும் வீடியோக்களில் பல நமது எண்ணங்களையே மாற்றுகின்றன.

சமூக ஊடகங்களில் வீடியோ 

இணையத்தில் வினோதமான வீடியோக்களை பார்க்கும்போது, அவற்றில் செய்திகள், அத்தியாவசியமான செய்திகள், காமெடி, சோகம், பயம், அதிசயம், அற்புதம், பொழுதுபோக்கு என பல வீடியோக்கள் வைரலாகின்றன. செய்திகள் மட்டுமல்ல, வீடியோக்களும் உலக நடப்புகளை உடனுக்குடன் வழங்குகின்றன. 

மேலும் படிக்க | Tiger Video: சுருண்டு கிடக்கும் புலியை சீண்டினால் என்னவாகும்! வைரலாகும் புலிவேட்டை வீடியோ

பயனுள்ள பல தகவல்களுடன் ஜாலியாக சிரித்து மகிழவும் வாய்ப்புகளைக் கொடுக்கும் சமூக ஊடகங்களில், வித்தியாசமான வீடியோக்கள் பகிரப்பட்டு உடனடியாக வைரலாகின்றன. விலங்குகளின் வீடியோக்களை பலரும் ரசித்துப் பார்க்கின்றனர். விலங்குகளின் சண்டை, காதல், பாசம், நேசம் மட்டுமல்ல, வேட்டையாடும் வீடியோக்களும் பலராலும் ரசிக்கப்பட்டு வைரல் வீடியோக்கல் என்ர அந்தஸ்தைப் பெறுகின்றன.

தற்போது வைரலாகும் வீடியோ ஒன்றில் சீறும் சிங்கங்கள், தங்களுக்கும் மோதும் வீடியோ வைரலாகிறது. பகையாளி சண்டையை விட பங்காளி சண்டை தான் பெரிசு! இந்த சொலவடையை நிரூபிக்கும் சண்டை வீடியோ இது. பலம் பொருந்திய சிங்கங்களுக்கு இடையில் சண்டை நடந்தால் என்னவாகும்? வீடியோ வைரலாகும்...  வை

வைரலாகும் சிங்கங்களின் பகை வீடியோ

எந்த சூழ்நிலையிலும் உதவி செய்வது உண்மையான நண்பனுக்கு அழகு என்பதை சிங்கங்கள் நிரூபிக்கின்றன. இரண்டு குழுக்களாக மோதிக் கொள்ளும் ரெஸ்ட்லிங் வீடியோ இது என்றும் சிலர் கருத்திட்டுள்ளனர். 

ஆனால், களேபரமான சண்டை நடந்துக் கொண்டிருக்கும்போது, வேலிக்கு அந்தப்புறம் நிற்கும் மக்கள், சண்டையை ரசித்துக் கொண்டிருக்கின்றானர். பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இதை ரசிப்பதுடன் புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், ஆறறிவு மக்களுக்கும், ஐந்தறிவு விலங்குகளுக்கும் இடையில் உள்ள தடுப்பு, வேலி ஒன்று மட்டும் தானே? வேலி இல்லையென்றால் என்ன ஆகும்? நீங்களே கற்பனை செய்து பாருங்கள்?

மேலும் படிக்க | 'சீக்கிரம்டா..வந்துட போறாரு': ஆப்பிள் திருடும் கில்லாடி குரங்குகள், சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ

சிங்க வேட்டை வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் இந்த வைரல் வீடியோவில், சிங்கங்களின் மோதல் வீடியோ டிரெண்டிங்கில் இருக்கிறது. மூர்க்கமாய் துள்ளிக் குதித்து சண்டையிடும் சிங்கங்களின் சீற்றா வீடியோ வைரலாகிறது.

இந்த வீடியோவைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது? வைரலாகும் இந்த வீடியோ, மிருகக்காட்சி சாலை ஒன்றில் எடுக்கப்பட்டது, பாதுகாப்பாய் இருக்கும் நிலையில் தான் மக்கள் இந்த சிங்கச் சண்டையை ரசித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

மேலும் படிக்க | ஓவர் தன்னம்பிக்கை உடம்புக்கு ஆகாது பாஸ்! யாரோடு மோதுற தெரியுமா? வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News