அமெரிக்க மணமகள் தனது திருமண நாளில் செல்ல நாயுடன் நடனமாடும் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவுகிறது!!
நம்மில் சிலருக்கு செல்ல பிராணிகள் மீது அதீத அக்கறையும் பாசமும் உண்டு. நான் அவற்றை வளர்க்கும் போது அழகாகவும், புத்திசாலியாகவும் மாற்றுவதற்காக சில பயிற்சிகளை அவற்றிற்கு நாம் கற்றுக்கொடுப்பது உண்டு. அது விளையாட்டாக இருக்கட்டும் உணவு உண்ணும் முறையாக இருக்கட்டு நாம் சொல்வதை அப்படியே கடைபிக்க நாம் கற்றுக்கொடுத்து வளர்ப்போம். பெரும் பாலும் மக்களில் அதிகம் வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் செல்லப்பிராணிகளை வளர்ப்பதாக பல ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
இந்தியர்களைக் காட்டிலும் இந்த செல்லப் பிராணிகளை வளர்க்கும் முறையில் வெளி நாட்டினர் சற்று கூடுதலானவர்கள். செல்லப்பிராணிகளுக்கு ஆடை அணிவித்து அழகு பார்ப்பது, ஃபேஸ்புக் அக்கவுண்ட் உருவாக்குவது , அவற்றிற்கு மனிதர்களைப் போல் பல பயிற்சி வகுப்புகள் கொடுப்பது , நாய்களுக்கென ரெஸ்டாரண்ட் , காரில் தனி இடம், பஞ்சு மெத்தை கொண்ட ஏசி அறை என வெளிநாட்டினர் மனிதர்களைப் போலவே செல்லப் பிராணிகளையும் கவனிப்பார்கள். இந்தக் கலாச்சாரம்தான் ஆடு , மாடு , கோழி மட்டுமே வளர்த்த நம் கலாச்சாரத்திலும் தொற்றிக் கொண்டது.
இந்நிலையில், வேடிக்கையாக நாய் செய்த காரியம் ஒன்று மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது. அதாவது லாஞ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் சாரா கார்சன் என்னும் பெண் ’மம்மி’ என்ற பெயர் கொண்ட நாயை வளர்த்து வருகிறார். இவர் அமெரிக்காவில் செலிபிரிட்டி நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளராக இருக்கிறார். அவர் வளர்க்கும் மம்மி நாய் சாராவின் திருமணத்தின் போது பரிசாக நடனம் ஆடி ஆச்சரியப்படுத்தியது.
அதன் பின் சாராவோடு இணைந்து ஆடிய நடனம்தான் சுற்றியிருந்த மக்களை வெகுவாக ஈர்த்தது. அந்த வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவைப் பார்க்கும் பலரும் ’சோ கியூட்’ என்று லைக்ஸுகளையும் , கமெண்டுகளையும் அள்ளி வீசுகின்றனர். ஏழு வயதான இந்த நாய் ‘America’s Got Talent’ என்னும் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
24 வயதான சாரா நாயின் இந்த பயிற்சி குறித்து கூறுகையில்; “ நான் மிகவும் பதட்டமாக இருந்தேன். நான் அணிந்திருந்த வெள்ளை நிற லாங் கவுனில் மம்மியோடு சேர்ந்து எவ்வாறு ஆடுவது என தயங்கினேன். இதற்கு முன்னோட்டப் பயிற்சியும் எடுக்கவில்லை. ஆனால் மம்மி மிக அழகாக ஆடி அனைவரையும் வியக்க வைத்துவிட்டது. திருமணப் பெண்ணான என்னைவிட அவன்தான் அங்கு நாயகனாகிவிட்டான் என்று பெருமையாகப் பேசியுள்ளார்.