கண்ணில் எச்சில் தேய்த்து அழும் குழந்தை: கியூட் வைரல் வீடியோ

வீட்டில் விழுந்த திட்டுக்கு கண்ணில் எச்சிலை தடவி, குழந்தை கண்ணீர் விட்டு அழும் கியூட் விடியோ இப்போது வைரலாகியிருக்கிறது. இந்த வீடியோவை நெட்டிசன்கள் வெகுவாக ரசித்துள்ளனர்.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 4, 2023, 12:04 PM IST
  • குழந்தை அழும் அழகான வீடியோ
  • எச்சில் தொட்டு கண்ணீர் வரவழைக்கிறது
  • கியூட் வீடியோவை ரசிக்கும் நெட்டிசன்கள்
கண்ணில் எச்சில் தேய்த்து அழும் குழந்தை: கியூட் வைரல் வீடியோ title=

குழந்தைகள் கோபத்திலும் செய்யும் செய்கைகள் நம்மை வெகுவாக சிரிக்க வைக்கும். அவர்களே அழகு தான், அதிலும் அவர்களின் அசைவுகளை செய்தால் சொல்லவா வேண்டும்?. ரசிக்க ஆயிரம் கண்கள் வேண்டும். சிரிக்க இன்னொரு வாய் வேண்டும். உங்களுக்கு எப்போது எல்லாம் மன அழுத்தமாக அல்லது கோபமாக இருக்கிறீர்களோ, சமூக வலைதளங்களுக்கு சென்று குழந்தைகளின் கியூட் வீடியோக்களை பிளே செய்து பார்த்து ரசியுங்கள் நிச்சயம் எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதில் இருந்து மீண்டு வந்துவிடுவீர்கள். அவர்களின் அழகியலில் பொதித்து கிடக்கும் மந்திரத்தின் வலிமை  அது. 

மேலும் படிக்க | தவறான திசையில் போய் கார் மீது மோதிய நபர் - அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு: வீடியோ

ஒவ்வொரு விஷயத்தையும் அவர்கள் முன்னால் செய்து காட்டுபவர்களை பார்த்து கற்றுக் கொள்வார்கள். பின்னர் அதை அப்படியே செய்தும் காட்டுவார்கள். அவர்கள் அதனை செய்யும்போது கூட இருந்து பார்த்தீர்கள் என்றால், நான் சொல்லிக் கொடுக்கவே இல்லையே எப்படி இவ்வாறு சரியாக செய்கிறார்கள் என்று நினைப்பீர்கள். அந்தளவுக்கு அவர்களின் புத்திக்கூர்மை இருக்கும். அப்படியான வீடியோ ஒன்று தான் இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகியிருக்கிறது. பெற்றோர் திட்டியதால் கோபத்தில் இருக்கும் குழந்தை, சத்தமாக அழுகிறது. இதனை வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் பெற்றோர் குழந்தையின் கண்களில் இருந்து வரும் கண்ணீரை துடைத்துவிடுகிறார்கள்.

ஆனால் அந்த குழந்தை கண்ணீர் துடைத்துவிடுவதை விரும்பவில்லை. அவர்கள் எந்தளவுக்கு கண்ணீரை துடைத்துவிடுகிறார்களோ, அதே அளவுக்கு தன் வாயில் இருந்து எச்சிலை எடுத்து வைத்து மீண்டும் அழத் தொடங்குகிறது. பார்க்கும்போதே மிகவும் அழகாகவும் ரசிக்க வைக்கும் வகையில் அந்த வீடியோ இருக்கிறது. பெற்றோர் மேல் இருக்கும் கோபத்தை கண்ணீராக வடிக்க, அதனை துடைத்துவிடுவதற்கும் அனுமதி கொடுக்க மாட்டேன் என்ற வீராப்பையும் காட்டுகிறது. இதனை பார்த்த பெற்றோருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. குழந்தையின் இந்த செய்கையை வீடியோ எடுத்து இணையத்திலும் பதிவிட்டுவிட்டனர்.

வீடியோ இப்போது வைரலாகிவிட்டது. லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். டிவிட்டரில் மட்டும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. இதற்கு கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன்கள், குழந்தையின் செய்கை எல்லாம் செம கியூட்டாக இருப்பதாக கூறியுள்ளனர். எத்தனை முறை வேண்டுமானாலும் சளிக்காமல் இந்த வீடியோவை பார்க்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க | தலைக்கு தில்ல பாத்தியா..சிங்கத்திடம் வீண் வம்பு செய்த குள்ள நரி: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News