கர்ப்பமான வயிறுடன் குத்தாட்டம் போட்ட நடிகை பிரணிதா; வீடியோ வைரல்

 சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நடிகை பிரணிதா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 27, 2022, 02:17 PM IST
  • நடிகை பிரணிதாவின் வைரல் வீடியோ
  • குத்தாட்டம் போட்ட நடிகை
  • வொர்க் அவுட் செய்யும் வீடியோ
கர்ப்பமான வயிறுடன் குத்தாட்டம் போட்ட நடிகை பிரணிதா; வீடியோ வைரல் title=

இன்றைய மார்டன் உலகில், பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள எல்லாவற்றையும் நாம் ஆன்லைனில் பதிவிடுவது, அதை ட்ரெண்டாகுவது பொன்றவற்றை செய்து வருகின்றோம். அப்படியாக உலகின், எங்கோ ஒரு மூலையில் நெகிழ்ச்சியான, சில விசித்திரமான,வேடிக்கையான, சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. அவை சில சமயங்களில், நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும், சில வீடியோ நமக்கு கோபத்தை தூண்டும், சிலவற்றை நாம் ஆச்சரியமாக கண்டு ரசிப்போம்.

சமீப காலமாக சினிமா பிரபலங்கள் தொடங்கி சீரியல் பிரபலங்கள் வரை சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து ரீலிஸ் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில், தற்போது நடிகை பிரணிதா இணைத்துள்ளார். ஆனால், இவர் கர்பத்துடன் போட்ட குத்தாட்டம் பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது. இந்த நிலையில் தற்போது கர்ப்பமான வயிறுடன் நடிகை பிரணிதா ஆடிய நடன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | கொடிய நாகப்பாம்பை கூலாக காப்பாற்றிய நபர்: இணையத்தில் வைரல் ஆன வீடியோ 

தென்னிந்திய நடிகைகளில் முக்கிய நடிகை பிரனிதா சுபாஷ். இவர் பல மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் கடந்த 2011ஆம் ஆண்டு உதயன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு சகுனி, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் போன்ற படங்களில் நடித்திருந்தார். இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் நித்தின் ராஜ் என்பவருடன் திருமணமானது. அதன்படி சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நடிகை பிரணிதா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். இதற்கு பிரபலங்கள் தொடங்கி, ரசிகர்கள் வரை பலரும் பிரணிதா மற்றும் அவரது கணவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரணிதா, தான் வொர்க் அவுட் செய்யும் வீடியோவையும், பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் பல லைக்ஸ்களை அள்ளி வீசினர் எனபது குறிப்பிடத்தக்கது.

 

 

மேலும் படிக்க | நாகப்பாம்பை உயிருடன் விழுங்கும் ராட்சஸ பாம்பு; மனதை உலுக்கும் வைரல் வீடியோ..!! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News