என்னுடைய பெயரில் இயங்கும் போலிகளின் செயல்: மாஸ் நடிகர்!!

தமிழ் சினிமாவில் உள்ள தற்போதைய மவுசான ஹீரோக்களில் ஒன்று நடிகர் விஜய் சேதுபதி. பொதுவாக நல்ல மவுசாக இருக்கும் ஹீரோ மற்றும் ஹீரோயின்களின் பெயரில் சமூக வலைதள பக்கத்தில் போலி கணக்கு இருக்கும். 

Last Updated : Jun 2, 2018, 08:12 AM IST
என்னுடைய பெயரில் இயங்கும் போலிகளின் செயல்: மாஸ் நடிகர்!! title=

தமிழ் சினிமாவில் உள்ள தற்போதைய மவுசான ஹீரோக்களில் ஒன்று நடிகர் விஜய் சேதுபதி. பொதுவாக நல்ல மவுசாக இருக்கும் ஹீரோ மற்றும் ஹீரோயின்களின் பெயரில் சமூக வலைதள பக்கத்தில் போலி கணக்கு இருக்கும். 

அதேபோல் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான விஜய் சேதுபதிக்கும் டிவிட்டர் கணக்கு இல்லாமல், அவரது பெயரில் போலி கணக்கு தொடங்கப்பட்டது. இதில், ரஜினிக்கு ஆதரவாக டிவிட்டரில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில், தமிழ்நாட்டுக்கு யாராவது வந்து நல்லது செய்யட்டும் என்கிற எண்ணத்தை விட, ரஜினியால் நல்லது எதுவும் நடந்துவிடக்கூடாதே என்கிற பதட்டம் தான் இங்கு நிறைய பேருக்கு. ரஜினி நல்ல மனிதர் என அதில் கூறப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், தற்போது தனது பெயரில் சமூக வலைதள பக்கத்தில் போலி கணக்கு உண்டாக்கியுள்ளவர்களுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக நடிகர் விஜய் சேதுபதி டிவிட்டரில் இணைந்துள்ளார். மேலும், ஒரு டிவிட் ஒன்றை பதிவிடுள்ளார். அதே பதிவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அதில், 

"நான் கூறியதாக நிறைய தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. அந்த கருத்துக்கள் என்னுடைய பெயரில் இயங்கும் போலிகளின் செயல் என்று தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Trending News