எதிர்கால பாலிவுட் நட்சத்திரங்களின் டான்ஸ்! ரெண்டு பேரும் ஜோடியா நடிக்க மாட்டாங்களோ?

Bollywood Viral Video: நடிகர் ஷாரூக்கான் மகனுடன் சேர்ந்து ஆராத்யா ராய் பச்சன் டான்ஸ் ஆடும் வீடியோ வைரலாகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 17, 2023, 10:05 PM IST
  • ஷாரூக்கானின் மகனுடன் டான்ஸ் ஆடும் ஐஸ்வர்யா ராய் மகள்
  • ஷாரூக்கானின் மகன் அப்ரம்
  • ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா பச்சன்
எதிர்கால பாலிவுட் நட்சத்திரங்களின் டான்ஸ்! ரெண்டு பேரும் ஜோடியா நடிக்க மாட்டாங்களோ? title=

ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா தற்போது டீன் ஏஜ் பெண்ணாக அழகாக வளர்ந்துவிட்டார். அவர், நடிகர் ஷாரூக்கான் மகனுடன் சேர்ந்து டான்ஸ் ஆடும் வீடியோ வைரலாகிறது. பள்ளி ஆண்டு விழாவில் ஷாருக்கானின் மகன் அப்ரம் உடன் நடனமாடும் வீடியோ ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆராத்யா பச்சன், அப்ரமின் இந்த வீடியோ அவர்களின் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்வின் வீடியோவாகும். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அனைவரின் மனதையும் கவர்ந்து வருகிறது.
 
சமீபத்தில், திருபாய் இன்டர்நேஷனல் பள்ளி அதன் ஆண்டு விழா நிகழ்வை நடத்தியது, இது பார்வையாளர்களுக்கு பல தருணங்களை அளித்தது. பாலிவுட் பிரபல குழந்தைகளின் நடிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஷாருக்கானின் மகன் அப்ராம் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சனின் மகள் ஆராத்யாவின் குதூகலத்தை நெட்டிசன்கள் பகிர்ந்து மகிழ்கின்றனர்.

மொஹபத்தியன், தேவதாஸ் மற்றும் பல படங்களில் ஷாருக்கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சனின் கெமிஸ்ட்ரியை நேசித்த ரசிகர்களால், அபிராமும் ஆராத்யாவும் அன்பைக் கண்டு வியக்காமல் இருக்க முடியிஅவில்லை.

மேலும் படிக்க | Viral Video: கில்லாடி கார் ட்ரைவருக்கு ஒரு ‘ஓ’ போடுங்க

ஞாயிற்றுக்கிழமை, ஷாருக்கானின் இளைய மகன் அப்ராம், ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனின் மகள் ஆராத்யா பச்சனுடன் நடனமாடும் வீடியோவில் குழந்தைகள் மகிழ்ச்சியான மனநிலையில் காணப்பட்டனர்.வீடியோவில் ஆராத்யா அபிராமை அன்புடன் பலமுறை கட்டிப்பிடித்தார்.

அழகாக இருக்கும் இரண்டு குழந்தைகளும் எதிர்காலத்தில் இந்திய சினிமாவின் நட்சத்திரங்களாக மின்னும் வாய்ப்பு இருக்கும் நிலையில், அவர்களிடையே சகோதர பாசம், இந்த வீடியோவில் அதிகமாக தென்படுவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். குழந்தைகளின் அன்பு பார்க்கவே பரவசமாக இருக்கிறது.

மேலும் படிக்க | 5 ரூபாய்க்கு இத்தனை அலப்பறையா? கேப் டிரைவருடன் வாய்த் தகராறு செய்யும் பெண் வீடியோ வைரல்

அமிதாப் பச்சனும் தனது பேத்தி ஆராத்யாவின் பள்ளியின் ஆண்டு விழாவை பாராட்டி தனது வலைப்பதிவில் பதிவு வெளியிட்டார்.

சமூக ஊடகங்களில் வைரலான நட்சத்திரக் குழந்தைகளின் பள்ளிக் கொண்ட்டாட நிகழ்ச்சிகளின் சில வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. அதில், ஈவில் லைக் மீ பாடலுக்கு ஆராத்யா பச்சன் ஆடுவதை, அம்மா ஐஸ்வர்யா ராய் பச்சன் மகிழ்ச்சியுடன் பார்ப்பதை காணலாம். இந்த நிகழ்ச்சியில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், நடிகர் அமிதாப் பச்சன், அவரது மனைவி ஜெயா பச்சன் என குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக கலந்து கொண்டனர்

பிரபல நடிகர் ஷாருக்கான் தனது மகன் அபிராம் மேடையில் இருப்பதைப் பார்த்து கண்ணீர் மல்கினார். தாரே ஜமீன் பர் பாடலுக்கு தைமூர் அலி கானின் வீடியோ நடனம் நெட்டிசன்களின் இதயங்களை உருக்கியது. 

மேலும் படிக்க | குரங்கு சேட்டைன்னா இதுதானா? ஷாக்காகும் அழகான பெண்ணும் சில குரங்குகளின் சேட்டையும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News