பொதுக்கூட்டத்தில் ராகுலுக்கு முத்தமிட்ட பெண்! வைரல் வீடியோ!!

குஜராத் மாநிலம் வலசத் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு மேடையில் வைத்து பெண் ஒருவர் முத்தம் கொடுத்தார்.

Last Updated : Feb 14, 2019, 05:04 PM IST
பொதுக்கூட்டத்தில் ராகுலுக்கு முத்தமிட்ட பெண்! வைரல் வீடியோ!! title=

குஜராத் மாநிலம் வலசத் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு மேடையில் வைத்து பெண் ஒருவர் முத்தம் கொடுத்தார்.

பிரதமர் மோடி பிறந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றவும் ராகுல் காந்தி திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். அந்தவகையில் குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டம், லால்டுங்ரி பகுதியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் இன்று பிற்பகலில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் கலந்து கொண்டார். 

அப்போது மேடையில் அமர்ந்திருந்த போது அக்கட்சியின் மகளிரணி நிர்வாகிகள் சிலர், ராகுல் காந்திக்கு மாலை அணிவிக்க வந்தனர். அதில், பெண் ஒருவர் ராகுல் காந்தியின் கன்னத்தில் திடீரென முத்தம் கொடுத்தார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

Trending News