பெண்ணை தாக்கியவனை விரட்டியடிக்கும் நாய்க்குட்டியின் வைரல் வீடியோ

சாலையில் நடந்து செல்லும் பெண் ஒருவரை தாக்குபவரை நாய் விரட்டியடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 8, 2022, 08:54 PM IST
பெண்ணை தாக்கியவனை விரட்டியடிக்கும் நாய்க்குட்டியின் வைரல் வீடியோ title=

சம்பளமில்லா பாதுகாவலன் நாய்க்குட்டி. நீங்கள் அன்போடு வீட்டில் வளர்த்துவிட்டால், அவை தன் உயிரையும் பொருட்படுத்தாமல் வளர்த்தவரை ஆபத்து காலத்தில் காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். வளர்த்தவர்களை காப்பாற்றுவதற்காக உயிரைக் கொடுத்த நாய்களும் உள்ளன. அது தொடர்பான வீடியோக்கள் கூட இணையத்தில் இருக்கின்றன. அந்த மனிதநேயத்துக்கு வலுசேர்க்கும் விதமாக இப்போது ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. சாலையில் செல்லும் பெண்ணை தாக்க செல்லும் நபரை நாய் ஒன்று வேகமாக குரைத்தும், தாக்கியும் காப்பாற்றுகிறது.

மேலும் படிக்க | வேட்டையாட வந்த சிங்கத்தை வகுந்தெடுத்த காட்டெருமை - வைரல் வீடியோ

இதனால், அந்தப் பெண் ஆபத்தில் இருந்து தப்பித்துக் கொள்கிறார். பெண்ணை தாக்கிச் சென்றவரை நாய் விடாமல் துரத்துகிறது. பார்க்கும் அனைவருக்கும் நாய் மீது வியப்பு ஏற்படுகிறது. வீடியோவில் பதிவாகியிருக்கும் காட்சியில் சாலையின் ஓரமாக ஆண் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார். நாய் ஒன்று சாலையின் நடுவே நிற்கிறது. அந்த நேரம் பெண் ஒருவர் சில உடைமைகளை வைத்துக் கொண்டு செல்கிறார்.

திடீரென அந்தப் பெண்ணை தொடரும் அந்த இளைஞர் திடீரென, பெண்ணிடம் முறைகேடாக நடந்து கொள்ள முற்படுகிறார். உடனே அந்தப் பெண் கூச்சலிடுகிறார். இதனைக் கவனிக்கும் நாய், வேகமாக ஓடி அந்தப் பெண்ணை காப்பாற்ற முயற்சி எடுக்கிறது. பெண்ணிடம் முறைகேடாக நடந்து கொண்ட அந்த இளைஞரை துரத்தித் துரத்தி கடிக்கிறது. இதனால், அந்த இளைஞர் அலறி அடித்துக் கொண்டு ஓடுகிறான். சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட ஆபத்தை, நொடிப்பொழுதில் காப்பாற்றிய நாயை பலரும் பாராட்டி வருகின்றனர். டிவிட்டரில் மட்டும் சுமார் 73 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர். 

மேலும் படிக்க | ஓவரா போற, ஒழுங்கா இரு: சீண்டிய நபரின் சட்டையை பிடித்து திட்டிய ஒராங்குட்டான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News