சீறி பாய்ந்த காளையிடம் சிக்கிய மனிதர்! வைரலாகும் வீடியோ!

மலைப்பகுதியில் சீறி வரும் காளை ஒன்று அந்த பகுதியில் வேகமாக இருசக்கர வாகனம் ஓட்டிவந்த ஒருவரை கடுமையாக தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 22, 2022, 11:45 AM IST
  • கலிபோர்னியாவில் டோனி இந்தர்பிட்சின் காளையால் கொடூரமாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
  • புல்வெளி நிறைந்த மலைப்பாங்கான ஒரு இடத்தில் பந்தயம் நடக்கிறது.
சீறி பாய்ந்த காளையிடம் சிக்கிய மனிதர்! வைரலாகும் வீடியோ! title=

கலிபோர்னியாவில் நடந்த பயங்கரமான ஒரு சம்பவம் தற்போது இணையவாசிகளை திகிலடைய செய்துள்ளது.  கலிபோர்னியாவின் பேக்கர்ஃபீல்ட் அருகே பியாஞ்சி ராக் கோப்லர் பந்தயத்தின் போது டோனி இந்தர்பிட்சின் என்பவர் ஒரு காளையால் கொடூரமாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.  இந்த கொடூர தாக்குதல் காட்சி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளதோடு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | நடுவானில் ஒரு அற்புதமான காதல் நடனம்; இது கழுகுகளின் காதல் வீடியோ! 

இந்த வைரல் வீடியோவில், புல்வெளி நிறைந்த மலைப்பாங்கான ஒரு இடத்தில் பந்தயம் நடக்கிறது.  அந்த இடத்தில கருப்பு நிறத்தில் காளை ஒன்று தென்படுகிறது, அப்போது அதன் அருகில் உள்ள பாதையில் ஒருவர் சைக்கிளை வேகமாக ஓட்டி செல்கிறார்.  அதிர்ஷ்டவசமாக அந்த நபரை அங்கு நின்று கொண்டிருந்த காளை ஒன்றும் செய்யவில்லை.  அவருக்கு பின் டோனி இந்தர்பிட்சின் என்பவர் சைக்கிளில் செல்கிறார், எதிர்பாராதவிதமாக அங்கிருந்து வந்த காளை டோனியை சைக்கிளோடு சேர்த்து முட்டி தூக்கி வீசுகிறது.  இதில் நிலைகுலைந்து விழுந்தவர் மீண்டும் எழுவதற்குள், அந்த காளை மறுபடியும் வந்து அவரை மீண்டும் முட்டி தூக்கி தூரமாக வீசுகிறது.  இந்த சம்பவத்தை கண்ட அங்கிருந்த மக்கள் பயத்தில் அலறுகின்றனர், டோனி மீண்டும் மெதுவாக எழுந்துகொள்ள முயல்கிறார், இதோடு இந்த வீடியோ முடிவடைகிறது.

 

(Video Source - ABC News)

இந்த வீடியோவை அங்கிருந்த ரிச்சர்ட் பெப்பர் என்கிற மற்றொரு சக போட்டியாளர் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார்.  இவ்வாறு 128 கிமீ வளைந்த நிலப்பரப்பு கொண்ட மலைப்பகுதியில், அதோடு பல்வேறு காட்டு விலங்குகள் கொண்ட இந்த இடத்தில பந்தயம் வைப்பது முட்டாள்தனமான ஒன்று என்று கூறப்படுகிறது.  இந்த தாக்குதல் குறித்து காயப்பட்ட டோனி கூறுகையில் "எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது, இதுவரை நான் இந்த அளவுக்கு காயப்பட்டதில்லை.  இந்த தாக்குதலுக்கு பிறகு என் கழுத்தில் ஏற்பட்ட வலி என்னை கொன்றது, இப்போது அந்த வலி என் முதுகு பக்கத்திலும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.  

மேலும் டோனி கூறுகையில் இந்த பந்தயத்தை என்னாள் முழுமையாக முடிக்க முடியாமல் போய்விட்டாலும், அடுத்த பந்தயத்திற்காக நான் எதிர்நோக்கி காத்திருக்கின்றேன் என்றும் கூறியுள்ளார்.  இந்த வீடியோ இணையத்தில் பல ஆயிரம் பார்வைகளை கடந்துள்ளது, பலரும் இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | மனித நேயம் மிக்க செயல்; காக்கைகளிடம் சிக்கித் தவித்த ஆந்தையை மீட்ட பள்ளி மாணவி! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News