விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; மனிதர்களுக்கு எமனாகும் என எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

விண்வெளி குப்பை: கடந்த 30 ஆண்டுகளில், விண்வெளியில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.  விண்வெளியில் செயலற்று போகும் ராக்கெட்டுகள் குப்பைகளாக மாறி வருகிறது.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 13, 2022, 05:14 PM IST
  • விண்வெளியில் மனிதனால் உருவாக்கப்பட்ட கழிவுகளின் அளவு அதிகரித்து வருகிறது.
  • பூமியில் விண்வெளியில் இருந்து குப்பைகள் விழுந்து யாரும் இறந்ததாக இது வரை எந்த செய்தியும் வரவில்லை.
  • ஆனால், எதிர்காலத்தில் நடக்கலாம் என எச்சரிக்கும் விஞ்ஞானிகள்.
விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; மனிதர்களுக்கு எமனாகும் என எச்சரிக்கும் விஞ்ஞானிகள் title=

விண்வெளி குப்பை: : நீங்கள் உங்கள் மாலை வீட்டில் பால்கனியில் அல்லது பார்க்கில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது, வானில் இருந்து பழைய ராக்கெட்டின் குப்பைகள் உங்கள் கூரையில் வந்து விழுந்தால் எப்படி இருக்கும். உங்களுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படலாம். அல்லது வீட்டிற்கு பலத்த சேதம் ஏற்படலாம். ஆனால் அத்தகைய நிகழ்வு சாத்தியமா? விண்வெளி கழிவுகள் எதிர்காலத்தில் மக்களுக்கு எமனாக மாறுமா? விண்வெளியில் இருந்து ஒவ்வொரு நிமிடமும் குப்பை பூமியில் விழுந்து கொண்டே இருக்கிறது ஆனால் நம் கண்களால் பார்க்க முடியாத அளவுக்கு சிறியது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 ஆயிரம் டன் தூசிகள் விண்வெளியில் இருந்து பூமியில் விழுகின்றன. விண்வெளியில் இருந்து குப்பைகள் விழுந்து கட்டிடங்கள் இடிந்து விழுவதும் பலமுறை நடந்துள்ளது.ஆனால் இதுவரை பூமியில் விண்வெளியில் இருந்து குப்பைகள் விழுந்து யாரும் இறந்ததாக எந்த செய்தியும் வரவில்லை. ஆனால் இது நடக்கக் கூடும் என எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

விண்வெளியில் மனிதனால் உருவாக்கப்பட்ட கழிவுகளின் அளவு அதிகரித்து வருகிறது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளில், விண்வெளியில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் பயனற்று போகும் போதும், செயலிழக்கும் போதும் அவை பூமியில் விழுகின்றன. ராக்கெட்டுகள், அவற்றின் பாகங்கள் மற்றும் பழைய செயற்கைக்கோள்கள் (குப்பைகள்) விண்வெளியில் இருந்து விழும் சம்பவங்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என புதிய ஆய்வுகள் கூறுகின்றன.நேச்சர் அஸ்ட்ரோனமி இதழில் ஒரு புதிய ஆய்வில் இதனால்,  மக்களை உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | செயற்கைக்கோளை அழித்த ரஷ்யா; விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; கலக்கத்தில் NASA..!!

ஜகார்த்தா, டாக்கா, லாகோஸ், நியூயார்க், பெய்ஜிங் மற்றும் மாஸ்கோ ஆகிய நகரங்களில் இது போன்ற சம்பவங்களால் அதிக ஆபத்து உள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. வரும் பத்து ஆண்டுகளில் விண்வெளியில் இருந்து விழும் ராக்கெட்டுகளால், செயற்கை கோள்களால், 10 சதவீதம் பேர் இறக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அவ்வாறான நிலை இல்லை எனினும் அடுத்த பத்து வருடங்களில் அவ்வாறான நிலை வரலாம் எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். 

மேலும் படிக்க | விண்வெளியில் துணி குப்பை அதிகமாகி விட்டது, சோப்பு அனுப்ப NASA திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News