பருவநிலை மாற்றத்தால் மனித குலத்திற்கு நேரடி அச்சுறுத்தல் பற்றிய புதிய மதிப்பீட்டின்படி, கடந்த 20 ஆண்டுகளில் தீவிர வானிலை நிகழ்வுகளுடன் தொடர்புடைய இயற்கை பேரழிவுகளில் கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்கள் இறந்துள்ளனர்.
புயல்கள், வெள்ளம் மற்றும் வெப்ப அலைகள் போன்ற, பருவநிலை தொடர்பான பேரழிவுகளால் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை வளரும் நாடுகளில் பெருமளவில் உள்ளது.
தொற்றுநோய் (Pandemic) காரணமாக இந்த ஆண்டு வெர்சுவல் முறையில் நடைபெற்ற பருவநிலை மாற்ற உச்சிமாநாட்டின் தொடக்கத்தில், ஜெர்மன்வாட்ச் என்ற கருத்தாய்வு அமைப்பு, இந்த பேரழிவுகளால் உலகப் பொருளாதாரத்திற்கு சுமார் 2.56 டிரில்லியன் டாலர் அளவுக்கு செலவாகியுள்ளதாக கணக்கிட்டது.
11,000 க்கும் அதிகமான தீவிர வானிலை நிகழ்வுகளின் பகுப்பாய்வு, 2000 ஆம் ஆண்டிலிருந்து, இந்த நிகழ்வுகளால் சுமார் 480,000 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. புவேர்ட்டோ ரிக்கோ, மியான்மார் (Myanmar) மற்றும் ஹைட்டி ஆகிய நாடுகள் மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகள் என தெரியவந்துள்ளது.
ஏழை நாடுகள் வெப்பநிலை உயர்வைக் குறைக்கவும், மாறிவரும் பருவநிலைக்கு (Climate Change) ஏற்ப தங்களை தயார் செய்துகொள்ளவும் ஏதுவாக, பணக்கார நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் டாலர்களை வழங்க வேண்டும் என 2015 பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் கீழ் முடிவு செய்யப்பட்டது.
ஆனால் வளரும் நாடுகளுக்கு பருவநிலை நடவடிக்கைகளுக்காக கிடைக்கும் உண்மையான நிதி மிகவும் குறைவாக உள்ளது என்று சமீபத்திய ஆராய்ச்சி கூறுகிறது.
ALSO READ: Climate Change: சஹாரா பாலைவனத்தை அச்சுறுத்தும் பனிப் போர்வை
ஜேர்மன்வாட்சின் உலகளாவிய பருவநிலை அட்டவணை இரண்டு தசாப்தத்தின் தீவிர வானிலை நிகழ்வுகளின் தாக்கத்தை ஆய்வு செய்தது. குறிப்பாக 2019 புயல்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன. இது கரீபியன், கிழக்கு ஆபிரிக்கா மற்றும் தெற்காசியாவின் சில பகுதிகளில் பேரழிவுகரமான புயல்கள் மற்றும் சூறாவளிகளை (Cyclone) உருவாக்கியது.
"மோசமான வானிலை நிகழ்வுகளின் விளைவுகளை கையாள்வதில் ஏழை நாடுகள் குறிப்பாக பெரும் சவால்களை எதிர்கொள்கின்றன என்பதை இது காட்டுகிறது" என்று இணை எழுத்தாளர் டேவிட் எக்ஸ்டீன் கூறினார்.
"அவர்களுக்கு அவசர கதியில், நிதி உதவி மற்றும் தொழில்நுட்ப உதவி தேவை." என்றார் அவர்.
"ஏழை நாடுகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. ஏனெனில் அவை பருவநிலை மாற்றங்களால் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. இந்த பாதிப்புகளை சமாளிக்கும் திறனும் இந்த நாடுகளுக்கு மிக குறைவாகவே உள்ளன” என்று இணை எழுத்தாளர் வேரா கியுன்செல் கூறினார்.
ஹைட்டி, பிலிப்பைன்ஸ் மற்றும் பாக்கிஸ்தான் போன்ற நாடுகள் தீவிர வானிலை நிகழ்வுகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளன.
நெதர்லாந்து நடத்திய பருவநிலை உச்சி மாநாடு, மாறிவரும் காலநிலையை சமாளிக்க நாடுகளுக்கு உதவ, உறுதியான புதிய முயற்சிகளை வழங்குவதற்கான தெளிவான உறுதிப்பாட்டை வளர்ந்த நாடுகள் கண்டிப்பாக எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளன.
ALSO READ: அண்டார்டிகாவின் கடற்பரப்பில் மீத்தேன் கசிவு.. விஞ்ஞானிகள் கவலை.. !!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR