புதுடெல்லி: கொசுக்கடி என்பது எரிச்சல் ஊட்டுவது மட்டுமல்ல, பல நோய்களுக்குக் காரணம் ஆகும் தொல்லை ஆகும். சிலரை கொசு மிகவும் அதிகமாக கடிக்கும், ஆனால், சிலரை கொசு அதிகமாக கடிக்காது. இதை, ‘கொசுவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்’ என்று சிலர் வருத்தத்துடன் சொல்வதுண்டு. கொசு தொடர்பான ஆராய்ச்சி ஒன்று, கொசு ஒருவரை அதிகமாக கடிக்க காரணம் என்ன என்று கண்டறிந்துள்ளது. அதன்படி, கொசுவை ஈர்க்கும் ‘உடல் வாசனை’ இருப்பவர்களை கொசு மிகவும் காதலிக்கிறதாம்!! காந்தம் போல ஈர்க்கும் இந்த வாசனையானது, பிறரைவிட 100 மடங்கு அதிகமாக கொசுவை ஒருவரிடம் ஈர்க்குமாம். அது என்ன வாசனை?
இரு தினங்களுக்கு முன் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகளின்படி, அதிக அளவு கார்பாக்சிலிக் அமிலங்களை உற்பத்தி செய்யும் நபர்களை கொசுக்கள் அதிகம் கடிக்கிறது. "உங்கள் தோலில் இந்த பொருட்கள் அதிக அளவில் இருந்தால், கொசு உங்களையே சுற்றிச் சுற்றி வரும்... உங்களை கொசு கடிப்பதற்கு வேறு காரணமே தேவையில்லை” என்று நியூயார்க்கில் உள்ள ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் லெஸ்லி வோஷால் கூறுகிறார்.
மேலும் படிக்க | வாய்யில் புண்ணா? இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம்!
செல் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, சிலர் உண்மையில் "கொசுக் காந்தங்கள்" என்றும், அது அவர்கள் வாசனையுடன் இணைக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கிறது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஒவ்வொரு நபரின் உடலும் சில விதமான வாசனைகளை வெளியிடும். இந்த தனித்துவமான வாசனை என்பது, பல்வேறு இரசாயன கலவைகளை உள்ளடக்கியது, இது காதலுக்கும் காமத்துக்கும் மட்டுமல்ல, கொசுவையும் மனிதர்களை நோக்கி ஈர்க்க வைக்கும் இரசாயனங்களாக இருக்கிறது.
உடலில் இருந்து கார்பாக்சிலிக் அமிலங்கள் அதிக அளவில் உற்பத்தியாகும் நபர்களை கொசுக்கள் அதிகம் விரும்புகின்றன. கொசுவுக்கு ஒருவரை பிடிப்பதற்கு இந்த கார்பாக்சிலிக் அமிலங்கள் மட்டும் தான் காரணம் என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்துவர்க்காக பல ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள், கொசு ஒருவரை அதிகம் கடிப்பதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டறியும் பரிசோதனையை வடிவமைத்தனர் என்று பயோடெக் நிறுவனமான கிங்டம் சூப்பர் கல்ச்சர்ஸின் மூத்த விஞ்ஞானியும் ஆய்வின் முதன்மை ஆய்வாளருமான மரியா எலினா டி ஓபால்டியா கூறினார்.
மேலும் படிக்க | 45 நாள்களில் பதவி காலி... லிஸ் ட்ரஸ் ராஜினாமா - இங்கிலாந்தின் அடுத்த பிரமதர் யார்?
ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 64 தன்னார்வலர்கள் குறைந்தது ஆறு மணிநேரம் தங்கள் முன்கைகளைச் சுற்றி நைலான் உறைகளை அணியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர், அதன் பிறகு அவர்கள் ஒவ்வொருவரின் தனித்துவமான வாசனையையும் ஆய்வாளர்கள் பதிவு செய்துக் கொண்டனர். பிறகு, மஞ்சள் காய்ச்சல், ஜிகா மற்றும் டெங்கு போன்ற நோய்களைப் பரப்பும் பெண் ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் நிறைந்த மூடிய கொள்கலனில் நீண்ட குழாயின் முடிவில் வெவ்வேறு பங்கேற்பாளர்களிடமிருந்து இரண்டு மாதிரிகளை வைத்தனர்.
ஆராய்ச்சி பல மாதங்களாக தொடர்ந்தது. அவ்வப்போது தன்னார்வலர்களிடமிருந்து புதிய மாதிரிகளும் பெறப்பட்டு பரிசோதனைகள் நடைபெற்றன. இந்த் ஆய்வின் முடிவில்தான், கார்பாக்சிலிக் அமிலங்களை உருவாக்கம்தான் கொசு, ஒருவரை அதிகம் கடிப்பதற்கான காரணம் என்று தெரிந்துள்ளது. இந்த அமிலம், "க்ரீஸ் மூலக்கூறுகள்" என்றும், இவை நமது சருமத்தை ஈரப்பதமாக பாதுகாக்கவும் உதவுகின்றன. வெவ்வேறு நபர்களின் உடலில் இருந்து உருவாகும் கார்பாக்சிலிக் அமிலத்தின் அளவு மாறுபாடு தான் கொசுக்களின் விருப்பத்தைத் தீர்மானிக்கின்றன என்று ஆய்வு தெரிவிக்கிறது.
பல மாதங்களாக நடைபெற்ற இந்த ஆய்வு, உணவு அல்லது தனிப்பட்ட சுகாதாரம் போன்ற எந்த தனிப்பட்ட காரணிகளும் கொசுக்களின் விருப்பத்தை முடிவு செய்யவில்லை, கார்பாக்சிலிக் அமிலம் மட்டுமே உங்களை கொசுக்கடி மற்றும் அதனால் உருவாகும் நோய்களுக்கு ஆதாரமாக இருப்பதாக தெரிவித்தனர். கொசுவுக்கு உங்களை பிடித்திருக்கிறதா? இல்லையா?
மேலும் படிக்க | நேபாள தலைநகர் காத்மாண்டுவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் !
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ