நாசா தனது புதிய கழிப்பறையை அக்டோபர் 1 ஆம் தேதி விண்வெளிக்கு அனுப்பியது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்களின் வாழ்க்கையை மேம்படுத்த ஒரு புதிய விண்வெளி கழிப்பறை கொண்டு வர நாசா சமீபத்தில் 23 மில்லியன் டாலர்களை செலவிட்டது. அக்டோபர் முதல் நாளன்று அந்த கழிப்பறை விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது.
விண்வெளிக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை கழிப்பறை பிரச்சனை தான். இந்த நவீன கழிப்பறை விண்வெளியில் சிறப்பாக செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் ISSஇல் உள்ள விண்வெளி வீராங்கனைகளின் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்யும் வகையில் இந்த கழிப்பறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
UWMS
புதிய கழிப்பறைக்கு யுனிவர்சல் கழிவு மேலாண்மை அமைப்பு (Universal Waste Management System (UWMS)) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய கழிவறையானது, விண்வெளியில் பயன்படுத்தப்படும் முந்தைய கழிவறையை விட 65 சதவீத எடை குறைவானது 40 சதவீதம் சிறியது என்று கூறப்படுகிறது.1990களில் வடிவமைக்கப்பட்ட கழிவறையில், கழிவுகள் அப்படியே சேகரிப்பு முறை தான் உள்ளது.
ஒரு புதிய கழிப்பறையை வடிவமைப்பதன் பின்னணியில் பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம் என்ன தெரியுமா? விண்வெளி நிலையத்தில் பணிபுரியும் பெண்களின் சிக்கல்களை களைவதாகும். பழைய கழிவறையில் சிறுநீர் மற்றும் மலம் கழிக்க மட்டுமே இடம் இருந்தது. ஆனால் இரண்டையும் ஒரே நேரத்தில் வெளியேற்ற முடியாது. தற்போது வடிவமைக்கப்பட்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள கழிவறையில் பழைய மாதிரியில் இருந்த அசெளகரியங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு வசதியாக உருவாக்கப்பட்டுள்ளது. இனிமேல் விண்வெளிக்கு சென்றும் கழிவுப் பிரச்சனையை நினைத்து கவலைப்படாமல் இருக்கலாம்.
To Boldly Go
What's more exciting than a new toilet? A new SPACE toilet.@NASA https://t.co/6sIh97TsNI pic.twitter.com/c1hHQxDtzw— Chris Hadfield (@Cmdr_Hadfield) September 26, 2020
புதிய வடிவமைப்பு, சிறியதாகவும், வித்தியாசமாகவும் தோற்றமளித்தாலும், விண்வெளி உடல் கழிவுகளை கழிக்க வசதியாகவும், தேவையான வசதிகளை கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய வடிவமைப்பிற்கு குறைந்த பராமரிப்பு மற்றும் பிளம்பிங் தேவைப்படும். கூடுதலாக, தொடைப் பகுதியில் இருந்த கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டுள்ளன, இப்போது வசதியை உறுதி செய்யும் வகையில் கால் மற்றும் கைகளை பிடித்து கொள்வதற்கு பிடிமானங்களும் வைக்கப்பட்டிருக்கின்றன.
தொடர்புடைய செய்தி | விண்வெளி வீரர்கள் சந்திக்கும் கழிப்பறை பிரச்சனையை தீர்க்க NASA முயற்சி...!!!
விண்வெளியில் மலம் கழித்தல் எளிதானது என்றாலும், அதை அப்புறப்படுத்துவது தான் மிகப் பெரிய பிரச்சினையாக இருந்துவந்தது. மலக் கழிவுகள் காற்று புகாத பைகளில் வைக்கப்பட்டு, பின்னர் ஒரு சரக்குக் கலனில் பூமிக்கு திருப்பி அனுப்பப்படுகின்றன, ஆனால், சிறுநீர், வடிகட்டி, சுத்தீகரித்து மீண்டும் விண்வெளி நிலையத்தில் பயன்படுத்தப்படும்.
ஆரம்பகால விண்வெளி பயணங்களில் கழிப்பறைகள் இல்லை. 1961 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு சென்ற விண்வெளி வீரர் ஆலன் ஷெப்பர்ட் (Alan Shepard),சிறுநீர் கழிக்க வேண்டியிருந்தது. விண்வெளியில் சிறுநீர் கழிப்பதற்கான அன்றைய தீர்வு பிளாஸ்டிக் குழாய்களைப் பயன்படுத்துவதாகவே இருந்தது.
ஆனால் அது வேலை செய்யாமல் போனது மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பிரச்சனை அதிகமாக இருந்தது. அதோடு, பிளாஸ்டிக் குழாய்களில் கசிவும் ஏற்பட்டது.
ISSஇல் ஈர்ப்புவிசை இல்லாததால், ஈர்ப்புக்கு பதிலாக காற்றோட்டத்தை மனதில் வைத்து கழிவறைகள் உருவாக்கப்படுகின்றன.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR