செவ்வாய் கிரகத்தில் தங்க குன்றுகள்? NASA வெளியிட்டுள்ள அசத்தல் படங்கள்

செவ்வாய் கிரக விண்கலமான ஒடிஸியின் 20 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் சிறப்பு படங்களின் தொகுப்பாகும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 12, 2021, 08:53 PM IST
  • செவ்வாய் கிரகத்தின் வடக்கு துருவத்தை சுற்றி காற்றில் அலை வீசுவது போல் தோற்றம் அளிக்கிறது.
  • 30 கிலோமீட்டர் பரப்பளவிலான இடம் புகைப்படத்தில் பதிவாகியுள்ளது.
  • செவ்வாய் கிரக விண்கலமான ஒடிஸியின் 20 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் சிறப்பு படங்களின் தொகுப்பாகும்.
செவ்வாய் கிரகத்தில் தங்க குன்றுகள்? NASA வெளியிட்டுள்ள அசத்தல் படங்கள் title=

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்தின் சமீபத்திய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படத்தில் செவ்வாய் கிரக்கத்தின் மேற்பரப்பு  நீலமான நிறத்தில் சூழப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. செவ்வாய் கிரகத்தில் எப்படி இப்படி ஒரு நீல நிறம் சூழ்ந்தது  என்ற கேள்வி மனதில் எழுகிறதா. 

நாசாவின் (NASA) ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம், செவ்வாய் கிரகத்தில், அலை அலையாக சிறு குன்றுகள் இருப்பது போன்ற ஒரு புகைபடத்தை வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் வடக்கு துருவத்தை சுற்றி காற்றில் அலை வீசுவது போல் தோற்றம் அளிக்கிறது.

இந்த வண்ண படத்தில், குளிரான வெப்பநிலை உள்ள பகுதிகள் நீல நிறங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதே நேரத்தில் வெப்பமான அம்சங்கள் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ணங்களில் சித்தரிக்கப்படுகின்றன. இதனால், இருண்ட, சூரிய வெப்பமான குன்றுகள் தங்க நிறத்தில் ஒளிர்வது போல் தோற்றம் அளிக்கிறது. 30 கிலோமீட்டர் பரப்பளவிலான இடம் புகைப்படத்தில் பதிவாகியுள்ளது. 

ALSO READ | செவ்வாய் கிரகத்தில் ஒரு Selfie; ஹெலிகாப்டருடன் செல்பி எடுத்த நாசா விண்கலம்

இந்த காட்சி செவ்வாய் ஒடிஸி சுற்றுப்பாதையில் வெப்ப உமிழ்வு இமேஜிங் சிஸ்டம் கருவி மூலம் டிசம்பர் 2002 முதல் நவம்பர் 2004 வரையிலான காலகட்டத்தில் எடுக்கப்பட்ட படங்களை ஒருங்கிணைக்கிறது. இது வரலாற்றில் மிக நீண்ட காலமாக செயல்படும், செவ்வாய் கிரக விண்கலமான ஒடிஸியின் 20 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் சிறப்பு படங்களின் தொகுப்பாகும். செவ்வாய் கிரகத்தில் படம்பிடிக்கப்பட்ட இந்த இடம்,  80.3 டிகிரி வடக்கு அட்சரேகை, 172.1 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் அமைந்துள்ள இடமாகும்.

செவ்வாய் கிரகத்தில், மிக நீண்ட காலமாக இருக்கும் இந்த விண்கலம், செவ்வாயின் மேற்பரப்பை ஆராயவும், அதில் தண்ணீர் உள்ளத்தா என்பதைக் கண்டறியவும், செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் இடங்களை மதிப்பிடவும், கிரகத்தின் மர்மமான நிலவுகளை ஆய்வு செய்யவும் உதவியது.

ALSO READ | வரலாறு படைத்துள்ள NASA; Ingenuity ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News