Monkeypox vs Smallpox: குரங்கம்மைக்கும் பெரியம்மைக்கும் உள்ள ஆச்சரியமான தொடர்பு

Monkeypox and Smallpox Connection: குரங்கம்மை நோய்க்கு, பெரியம்மைக்கு கொடுக்கும் தடுப்பூசியை பயன்படுத்தலாம் என்ற அனுமதி பல கேள்விகளை எழுப்புகிறது. இரு நோய்களுக்கும் இடையிலான ஒற்றுமையும் வித்தியாசங்களும்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 26, 2022, 07:46 AM IST
  • குரங்கு அம்மை,சர்வதேச சுகாதார அவசர நிலையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
  • பெரியம்மைக்கான தடுப்பூசியை குரங்கு அம்மைக்கு பயன்படுத்தலாம்
  • இம்வானெக்ஸ் பெரியம்மை தடுப்பூசி குரங்கு அம்மைக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது
Monkeypox vs Smallpox: குரங்கம்மைக்கும் பெரியம்மைக்கும் உள்ள ஆச்சரியமான தொடர்பு title=

பெரியம்மைக்கான தடுப்பூசியை குரங்கு அம்மைக்குப் பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில்,  குரங்கு அம்மை நோயானது, பெரியம்மை நோயுடன் தொடர்புடையது என்பதற்கான உறுதியான உதாரணமாகிறது. இருந்தாலும், இந்த இரு நோய்களுக்கும் இடையில் பல  ஒற்றுமைகள் இருந்தாலும், இவற்றுக்கு இடையில் உள்ள வித்தியாசங்களும், நோயின் தன்மையும் தடுப்பூசினால் பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. பெரியம்மை நோயானது 1980 இல் ஒழிக்கப்படுவதற்கு முன்பு, ஆண்டுதோறும் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானவர்களைக் கொன்றது என்பது, தற்போது குரங்கு அம்மை தொடர்பான கவலைகளை அதிகரித்துள்ளது.
 
1970 ஆம் ஆண்டு காங்கோ ஜனநாயகக் குடியரசில் வசிக்கும் ஒன்பது வயது சிறுவனுக்கு குரங்கு காய்ச்சல் நோயால் மனிதர்களுக்கு ஏற்பட்ட முதல் பாதிப்பு கண்டறியப்பட்டது என்று உலக சுகாதார அமைப்பு  கூறுகிறது. முதலில், பல கிராமப்புறங்களில் இருந்து நோய் பாதிப்பு பதிவாகின. பிறகு, தொடர்ந்து ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குரங்கம்மை பாதிப்பு தொடர்பான தகவல் வெளிவந்தன.

மேலும் படிக்க | குரங்கு அம்மை நோய் பரவல் உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவிப்பு: WHO

ஆனால் 50 ஆண்டுகளாக ஆப்பிரிக்காவில் மட்டுமே குரங்கம்மை நோய் பாதிப்புகள் இருந்தன. 2019ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா பாதிப்பு மிகப்பெரிய தொற்றுநோயாக உருவெடுத்து உலகையே பல மாதங்கள் முடக்கிய நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியது மக்களுக்கு ஆசுவாசம் அளித்தது.

ஆனால், நிம்மதிப் பெருமூச்சு விடாதீர்கள் என்று சொல்வதைப் போல, இந்த ஆண்டு மே மாதம் முதல் குரங்கு அம்மை நோய் தனது, கிளைகளை உலகெங்கிலும் பரப்பத் தொடங்கிவிட்டது. சர்வதேச அளவில் சுகாதார அச்சங்களை குரங்கம்மை அதிகரித்துள்ள அதே நேரத்தில் விஞ்ஞானிகள், இதற்கான காரணங்களையும், தீர்வையும் கண்டுப்பிடிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.  

குரங்கு அம்மை நோயின் நதிமூலம்

1958 ஆம் ஆண்டில், டென்மார்க்கின் கோபன்ஹேகனில் குரங்கம்மை நோய் முதலில் கண்டறியப்பட்டது. ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த குரங்குகளுக்கு குரங்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அப்போதிருந்து குரங்கம்மை நோய் ஏற்பட்டது. ஆனால் அந்த காலகட்டத்தில் விலங்குகளுக்கு மட்டுமே இந்த நோய் பாதிப்பு இருந்தது.  

மேலும் படிக்க | குரங்கு அம்மைக்கு பெரியம்மை தடுப்பூசி - ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

குரங்கு அம்மை நோய் என்றால் என்ன?

பெரியம்மை பற்றி கேள்விப்பட்டிருந்தால் அல்லது துரதிர்ஷ்டவசமாக அதை அனுபவித்திருந்தால், குரங்கம்மை நோய் என்றால் என்ன என்பது பற்றிய அடிப்படை புரிதல் உங்களுக்கு இருக்கும். குரங்கம்மை நோயும் பெரியம்மை நோய்க்கு உண்டான அதே அறிகுறிகளை கொண்டுள்ளது. 

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்,  இது பெரியம்மை நோயை விட குறைவான தீவிரம் கொண்டது. குரங்கு பாக்ஸ் நோயானது, பெரியம்மை போன்ற அறிகுறிகளைக் கொண்டது; விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு (ஜூனோடிக்) பரவும் ஒரு வைரஸ் நோய் ஆகும்.

உலகம் முழுவதும் குரங்கு அம்மை தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், 75-க்கும் மேற்பட்ட நாடுகளில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மைத் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 5 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

குரங்கு அம்மையை சர்வதேச சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளதற்கு மத்தியில், பெரியம்மைக்கான தடுப்பூசியை குரங்கு அம்மைக்கு பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி அளித்துள்ளது. 

டென்மார்க்கை சேர்ந்த மருந்து நிறுவனத்தின் இம்வானெக்ஸ் பெரியம்மை தடுப்பூசியை குரங்கு அம்மைக்கு எதிராகப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இம்வானெக்ஸ் தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் 2013ம் ஆண்டு அனுமதி அளித்தது. 

மேலும் படிக்க | 95 சதவீதம் குரங்கு அம்மை இதன் மூலம்தான் பரவுகின்றன! வெளியாகிய அதிர்ச்சி தகவல்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News