புதுடெல்லி: விண்வெளியில் வால்மீனில் (Comet) வால் நீங்கள் பார்த்திருக்கலாம். விண்வெளியில் வால்மீன்களுக்கு மட்டுமே வால் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் சில நேரங்களில் வேறு சில கிரகங்களுக்கும் வால் இருக்கலாம் என்ற கருத்தும் விஞ்ஞானரீதியாக கூறப்பட்டது. தற்போது புதன் கோளுக்கு வால் இருப்பதாக வானியலாளர்கள் கூறுகின்றனர்.
புதனுக்குக் வால்
வானியலாளர்களின் கூற்றுப்படி, விண்வெளியில் (Space) வால்மீனுக்கு இருப்பதைப் போலவே, புதனுக்கும் வால் இருப்பதைப் பார்க்கலாம். இந்த வால் புதன் கிரகத்திலிருந்து மில்லியன் கிலோமீட்டர் தொலைவுக்குக் நீள்கிறது. இந்த வால் வெளிர் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். இருப்பினும், வானியலாளர்களின் கூற்றுப்படி, இது சூரிய மண்டலத்தில் புதனின் நிலை காரணமாக உருவாகிறது.
புதன் கோள் (Mercury) சூரியனுக்கு (Sun) மிக அருகில் உள்ள கோளாகும். வானியலாளர்களின் கூற்றுப்படி, சூரிய மண்டலத்தில் சூரியனுக்கு மிக நெருக்கமான கிரகம் புதன் தான். இந்த இரண்டிற்கும் இடையிலான தூரம் 58 மில்லியன் கிலோமீட்டர். இதன் காரணமாக, புதன் கிரகத்தில் தொடர்ந்து சூரிய கதிர்வீச்சு (Solar Irradiance) மற்றும் சூரிய காற்று மழை (Solar Wind) பெய்கிறது. பூமியுடன் ஒப்பிடும்போது புதன் கிரகத்தின் எடை 5.5 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | உலகின் மிக விசித்திரமான மூடநம்பிக்கைகளில் சில…
புதன் கிரகத்தின் (Mercury) ஈர்ப்பு மிகக் குறைவு. இந்த கிரகத்திற்கு வளிமண்டலம் போன்ற எதுவும் இல்லை என்பதற்கு இதுவே காரணம்.
வால்மீனின் வால் இப்படித்தான் உருவாகிறது
சூரிய கதிர்வீச்சின் அழுத்தம் காரணமாக வால்மீனுக்கு வால் உருவாகிறது. வால்மீன் சூரியனை நெருங்கும் போது, அதன் தூசி வால்மீனிலிருந்து விலகி, வால்மீனின் உள்ளே இருக்கும் பனியை உருக்கிவிடுகிறது. சூரியனில் இருந்து தொலைவிற்கு செல்லும்போது அந்த பனியின் எச்சமானது வால்மீனின் வாலாக உருவாகிறது.
புதன் கிரகத்தின் வால் இப்படித்தான் ஆகிறது
சோடியம் அணுக்கள் புதனின் வால் உருவாக காரணம். சூரியனின் புற ஊதா கதிர்கள் புதனின் மீது விழும்போது இந்த அணுக்கள் பிரகாசிக்கின்றன. இந்த செயல்முறையின் காரணமாக, வால்மீனுக்கு இருப்பது போல புதனுக்குக் வால் தோன்றுகிறது. இந்த வால் சுமார் 3.5 மில்லியன் கிலோமீட்டர் நீளம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
Also Read | வைர மழை பெய்யும் சூரிய மண்டலத்தின் மிக ஆபத்தான கிரகம் எது தெரியுமா..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR