உலகின் ஒரு நகரத்தில் இன்று அஸ்தமித்த சூரியன் இனி 60 நாட்கள் கழித்துத்தான் உதிக்கும். சூரியனின் பாராமுகம் காணும் நாடு எது தெரியுமா? அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்பது இயற்கைக்கு சொல்லி வைத்த மூதுரை சூரியனுக்கும் பொருந்துமே, 60 நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு சூரியன் எங்கே போகிறார், இது சாத்தியமா என்ற கேள்விகள் எழுகிறதா?
அலாஸ்காவில் உள்ள ஒரு நகரத்தில் தான், இன்று விடைபெற்று செல்லும் சூரியன் இனி 60 நாட்கள் கழித்து உதிக்கும். அப்போது தான் அங்கு அடுத்த பகல் வரும். அதுவரை அந்த நகரம் இருள்சூழ் நகரம் தான்…
பாரோ (Barrow) என்று அழைக்கப்படும் உத்கியாக்விக் (Utqiagvik) நகரில், 2020 ஆம் ஆண்டில் நவம்பர் 19 ஆம் தேதி அஸ்தமித்து bye சொன்ன சூரியன் 60 நாட்களுக்கு பிறகு தான் hi சொல்லும்.
ஆர்க்டிக் வட்டத்தின் வடக்கே அமைந்துள்ள சிறிய நகரம் இருளின் குகைக்குள் நுழைந்துவிட்டது. இந்த நிகழ்வு துருவ இரவு (polar night) என்று அழைக்கப்படுகிறது. பூமியின் அச்சின் சாய்வின் காரணமாக இந்த நிகழ்வு குளிர்காலத்தில் நடைபெறுகிறது என்று சி.என்.என் (CNN) தெரிவித்துள்ளது.
பகலே இல்லாமல் இரவு மட்டுமே 24 மணி நேரமும் நீடிக்கும் நிலைமை பூமியின் வடக்கு மற்றும் தெற்கு துருவப் பகுதிகளில் ஏற்படுகிறது. இந்த துருவ இரவு (polar night) துருவ வட்டங்களுக்குள் (polar circles) மட்டுமே நிகழ்கிறது.
"துருவ இரவு என்பது ஒவ்வொரு குளிர்காலத்திலும் பாரோ (உத்கியாக்விக்) மற்றும் ஆர்க்டிக் வட்டத்திற்குள் உள்ள வேறு எந்த நகரங்களுக்கும் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வு ஆகும். இந்த சாய்வு சூரியனின் வட்டு எதுவும் அடிவானத்திற்கு மேலே தெரியாதபடி செய்கிறது" என்று சி.என்.என் வானிலை ஆய்வாளர் அலிசன் சின்சார் கூறினார்.
சூரியனே இல்லையென்றால் எப்படி இருக்கும் என்று திகைப்பாக இருக்கிறதா? இது குறித்து சி.என்.என் வானிலை ஆய்வாளர் விளக்கமாக சொல்கிறார். சூரியன் தெரியவில்லை என்றாலும், அந்த நகரம் காரிருளில் மூழ்கியிருகாது. பெரும்பாலான பகல்நேர நேரங்கள் சிவில் ட்விலைட் (civil twilight) என்று அழைக்கப்படும் மெல்லொளி, அதாவது மங்கலான வெளிச்சம் தென்படும் என்று காலங்களில் செல்லும் என்று சின்சார் கூறினார்.
"சூரிய உதயத்திற்கு சற்று முன்னதாகவோ அல்லது சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகும் வானம் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அதைத்தான் அந்த நகரவாசிகள் பார்க்க முடியும். அதாவது பகலவனை பகல் நேரத்தில், இந்தக் கோலத்தில் தான் தரிசிக்க முடியும். நவம்பர் 20 முதல் ஜனவரி 22 ஆம் தேதி வரை பாரோ (Barrow) நகரை சூரியன் நேரடியாக பார்க்க மாட்டார்" என்று சின்சார் கூறினார்.
இருப்பினும், இந்த நிகழ்வு இந்த ஊருக்கு மட்டும் பிரத்தியேகமானது என்று சொல்லிவிட முடியாது. ஆனால் இது துருவ இரவு நகரங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தை பிடிக்கும் நகரம் பாரோ (Barrow).
இதுவொரு அதிசய ஹோட்டல் | பேய்கள் மட்டுமே வசிக்கும் உலகின் மிக உயரமான North Koreaவின் ஹோட்டல்!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR