NASA: இது விண்ணிலா அல்லது கடலிலா? வைரலாகும் நாசாவின் விண்வெளி மர்ம வீடியோ

நாசா வெளியிட்ட ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. விண்ணிலா அல்லது நீருக்கடியிலா? என்ற கேள்வியையும் கேட்கும் அற்புத வீடியோவை நெட்டிசன்கள் பார்த்து மகிழ்கின்றனர்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 3, 2021, 08:22 AM IST
  • இது விண்ணிலா அல்லது நீருக்கடியிலா
  • விண்வெளியின் அற்புதங்கள்!
  • அறிவியலின் அழகான மர்மங்கள்
NASA: இது விண்ணிலா அல்லது கடலிலா? வைரலாகும் நாசாவின் விண்வெளி மர்ம வீடியோ  title=

நாசா வெளியிட்ட ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. இது விண்மீண்களுக்கு இடையிலா அல்லது நீருக்கடியிலா? என்ற கேள்வியையும் கேட்கிறது. பார்க்கப் பார்க்க பரவசமூட்டுவதாகவும் இருக்கும்  அற்புதமான வீடியோ என்று பாராட்டப்படுகிறது.

விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கும் விண்வெளி நிறுவனம் நாசா,தனது மற்றொரு மயக்கும் பதிவின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளது. இது,  நாசாவின் அண்டப் பாறை அதாவது காஸ்மிக் ரீஃப் (cosmic reef) பற்றிய வீடியோ

விண்வெளி எவ்வளவு மர்மமாக இருக்கிறதோ அவ்வளவு அழகாக இருக்கிறது. விண்வெளியின் அனைத்து ரகசியங்களையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம். பொதுவாக, நம்மால் கண்டுபிடிக்க முடிந்தவை நம்மை வியப்பில் ஆழ்த்துவதில்லை. நாம் காணக்கூடியவற்றின் அழகும், மகத்துவமும் ஒவ்வொரு முறையும் நமக்கு வித்தியாசமான உணர்வுகளை கொடுக்கிறது.

அந்த வகையில் அண்டப் பாறை (cosmic reef) தொடர்பாக வீடியோவை நாசா (NASA Video) வெளியிட்டுள்ளது. அதில், பூமியில் நீருக்கடியில் இருக்கும் பாறைகளை ஒத்தவாறு இருக்கும் cosmic reef ஆச்சரியத்தைத் தருகிறது.  இந்த வீடியோவுடன் ஒரு கேள்வியை பதிவிட்டுள்ள நாசா, 'இது, விண்மீன்களுக்கு இடையே உள்ளதா அல்லது நீருக்கடியில் உள்ளதா?' என்பதை யூகிக்குமாறு கேட்கிறது.

"நீருக்கடியிலா அல்லது விண்மீன்களுக்கு இடையிலா? (Interstellar or underwater?) கடலுக்கடியில் உள்ள பாறைகளைப் போல தோற்றமளிக்கும் இதற்கு "காஸ்மிக் ரீஃப்" என்று செல்லப்பெயர் வைக்கப்பட்டுளது. பெரிய நட்சத்திரத்தை உருவாக்கும் இந்தப் பகுதி, 163,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஒரு பெரிய சிவப்பு நெபுலா, NGC 2014 மற்றும் சிறிய அளவிலான ஒன்றும் உள்ளது. நீல நெபுலா, NGC 2020 என பல இங்கு இருக்கின்றன ... " என NASAவின் இன்ஸ்டாகிராம் பதிவில் கூறப்பட்டிருக்கிறது.

நாசாவின் வித்தியாமான மற்றும் ஆச்சரியம் ஏற்படுத்தும் பிற பதிவுகளைப் போலவேம் இந்த பதிவும் நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த கதையை வெளியிடும் நேரத்தில், வீடியோவுக்கு சுமார் ஒரு லட்சம் லைக் கிடைத்துள்ளது.

ALSO READ | நடனமாடும் விண்மீன் திரள்கள்; நாசாவின் புகைப்படம் வைரல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News