U-19 அணியில் இடம்பெற்றார் சச்சினின் மகன் அர்ஜூன்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர்(18), இலங்கைக்கு எதிரான U-19 அணியில் இடம்பெற்றுள்ளார்!

Last Updated : Jun 7, 2018, 08:32 PM IST
U-19 அணியில் இடம்பெற்றார் சச்சினின் மகன் அர்ஜூன்! title=

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர்(18), இலங்கைக்கு எதிரான U-19 அணியில் இடம்பெற்றுள்ளார்!

வரும் ஜூலை மாதம், இந்திய அணியின் இளையர் அணி இலங்கையில் 4 நாள் மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்ட அணியில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அவர்களது மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பிடித்துள்ளதாக BCCI அறிவித்துள்ளது.

அடுத்த மாதம் இலங்கையில் நடைப்பெறவுள்ள இத்தொடரில் 4 நாள் போட்டியில் தலைமை பொருப்பினை அனுஜ் ராவத் வகிப்பார். இவர் கடந்த 2017-18 ராஞ்சி போட்டியில் டெல்லி அணியின் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் போட்டி அணியின் தலைமை பொருப்பினை அர்யான் ஜுயால் வகிப்பார். இவர் விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் உத்திரபிரதேஷ் அணியில் A வரிசை வீரராக களமிறங்கியது குறிப்பிடத்தக்ககது.

UNA-வில் நடைப்பெற்ற Zonal Cricket Academy போட்டிகளில் U-19 அணியின் முக்கிய போட்டியாளராக அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் சிட்னி கிரிக்கெட் க்ரவுண் சார்பில், ஆஸ்திரேலியாவில் நடைப்பெற்ற டி20 போட்டியில் அர்ஜூன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அனைவரது கவணத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

Trending News