உத்தராகண்ட் ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!

உத்தராகண்ட் மாநிலம் அல்மோராவின் ட்வாரட் பகுதி ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்!

Last Updated : Mar 17, 2018, 06:48 PM IST
உத்தராகண்ட் ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு! title=

உத்தராகண்ட் மாநிலம் அல்மோராவின் ட்வாரட் பகுதி ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்!

நடிகரும், வருங்கால அரசியல்வாதியுமான ரஜினிகாந்த் உத்தராகண்ட் மாநிலம் அல்மோராவின் ட்வாரட் பகுதி ரசிகர்களை சந்தித்த் பேசினார். விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த், 15 நாட்கள் ஆன்மீக பயணமாக இமயமலை சென்றுள்ளார். இந்த பயணத்தின் 15 நாளான இன்று தன் ரசிகர்களை அவர் சந்தித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ரசிகர்கள் மத்தியில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக ரஜினி அறிவித்தார். இதனையடுத்து தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாவட்ட வாரியாக அதற்கு நிர்வாகிகள் நியமித்து வருகிறார். இதற்கிடையே பொது வெளியில் அவ்வப்போது தனது அரசியல் கருத்துகளை தெரிவித்து வருகிறார் ரஜினி.

முன்னதகா வேலப்பன்சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்த ரஜினி, எம்.ஜி.ஆரை போல ஏழை மக்களுக்கான ஆட்சியை என்னால் தர முடியும் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதற்கிடையில், ரஜினிகாந்த் நடித்துள்ள `காலா திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. அதேப்போல் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமல்லாமல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் ரஜினி நடிக்க இருக்கிறார். திரைப்பணிகளிலும், அரசியல் என இரண்டிலும் தொடர்ந்து ரஜினி கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், அவர் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த ஆசிரமத்தில் பிராத்தனை செய்தார். பின்னர் காஷ்மீரில் உள்ள குகைக்கோவிலுக்கும் ரியாசி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சிவ்கோரி என்ற குகைக்கோவிலுக்கு சென்று வழிபட்டார். 

இதனையடுத்த இன்று அவர் தனது ரசிகர்களை சந்தித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது!

Trending News