புதுச்சேரி மக்களுக்கு COVID-19 தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 158 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இந்த யூனியன் பிரதேசத்தில் மொத்த தொற்று எண்ணிக்கை 33,986 ஆக உள்ளது எனவும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 24, 2020, 04:13 PM IST
  • புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 158 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
  • இந்த யூனியன் பிரதேசத்தில் மொத்த தொற்று எண்ணிக்கை 33,986 ஆக உள்ளது என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
  • இறப்பு மற்றும் குணமடையும் விகிதங்கள் முறையே 1.72 சதவீதம் மற்றும் 86.59 சதவீதமாக உள்ளன.
புதுச்சேரி மக்களுக்கு COVID-19 தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்: முதல்வர் நாராயணசாமி title=

காரைக்கால், புதுச்சேரி: பீகாரில் கொரோனா வைரஸ் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்ததற்காக பாரதிய ஜனதா கட்சியை (BJP) காங்கிரஸ் விமர்சனம் செய்த நிலையில், புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் அரசும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதுச்சேரியில், முதலமைச்சர் வி.நாராயணசாமி தனது அரசு கோவிட் -19 க்கு  தடுப்பு மருந்தை, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அனைத்து மக்களுக்கும் இலவசமாக அளிக்கும் என்று கூறியுள்ளார்.

மத்திய அரசு நிதி வழங்கினாலும், வழங்காவிட்டாலும், அனைத்து புதுச்சேரி மக்களுக்கும்  இலவசமாக கோவிட் -19 தடுப்பூசி வழங்குவதாக நாராயணசாமி கூறினார்.

"பெரியம்மை மற்றும் போலியோ நோய்க்கான தடுப்பூசிகள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. மத்திய அரசு நிதி வழங்கினாலும், வழங்காவிட்டாலும், புதுச்சேரியில் உள்ள அனைவருக்கும் இலவசமாக தடுப்பு மருந்து வழங்குவோம்" என்று புதுச்சேரி முதல்வர் கூறினார் வெள்ளிக்கிழமை கூறினார்.

மேலும் படிக்க | India COVID-19 Update: 53,370 புதிய பாதிப்புகள்; மொத்த எண்ணிக்கை 78,14,682

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 158 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இந்த யூனியன் பிரதேசத்தில் மொத்த தொற்று எண்ணிக்கை 33,986 ஆக உள்ளது எனவும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

இறப்பு மற்றும் குணமடையும் விகிதங்கள் முறையே 1.72 சதவீதம் மற்றும் 86.59 சதவீதமாக உள்ளன. இதுவரை 2.82 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், அவற்றில் 2.44 லட்சம் பேருக்கு தொற்று இல்லை எனவும் சுகாதார அமைச்சக செயலர் தெரிவித்தார்.

இலவச கோவிட் -19 தடுப்பு மருந்தை வழங்கும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள்:

தமிழகம்: கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி தயாரானவுடன், அது மாநில மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமியும் தெரிவித்திருந்தார். 

இதனை விமர்சனம் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பெருந்தொற்றுக்கான தடுப்பு மருந்தை இலவசமாக வழங்குவது அரசின் கடமை எனக் கூறி இதனை இலவச திட்டமாக அறிவிப்பதுதஃவறு என விமர்சனம் செய்திருந்தார்.

மேலும் படிக்க | அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்: தமிழக முதல்வர் கே.பழனிசாமி அறிவிப்பு

பீகார்: பாஜக முன்னதாக தனது பீகார் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த அறிக்கையை வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் மருத்துவ பரிசோதனை நிலைகளில் உள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் அனைத்தும் பொது மக்களுக்கு கொடுப்பதற்காக உற்பத்தி செய்ய அனுமதி கிடைத்தவுடன் இலவசமாக மக்களுக்கு வழங்கப்படும் என்று கூறினார்.

மத்தியப் பிரதேசம்: மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கோவிட் -19 தடுப்பூசியை மாநிலத்தின் ஏழை மக்களுக்கு வழங்குவதாகவும், அதற்கான செலவை பாஜக அரசு ஏற்கும் என்றும் கூறினார்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News