Yellow Teeth Problem: உங்கள் பற்கள் மஞ்சள் நிறமாக இருப்பதை கவனிக்கிறவரா? உணவு, புகைபிடித்தல் அல்லது மோசமான வாய்வழி சுகாதாரம் போன்றவை இதற்கு காரணமாக உள்ளது.
டீ, காபி மற்றும் பிற உணவுப் பழக்கவழக்கங்கள் பற்களின் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கின்றன. இவற்றை சாப்பிட்டபின் உடனடியாக வாய் கொப்புளிக்கவும்.
பேக்கிங் சோடா மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு கொண்ட டூத் பேஸ்டை பயன்படுத்துவது பற்களின் மஞ்சள் நிறத்தைக் குறைக்க உதவும்.
ஆப்பிள் சைடர் வினிகர் பற்களில் கறை படிவதைக் குறைத்து வெண்மையை மேம்படுத்தும். ஆனால், ஆப்பிள் சைடர் வினிகரை அடிக்கடி பயன்படுத்தினால் பற்களின் மேற்பரப்பை சேதப்படுத்தும்.
பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை போக்க எளிய வழி, அருகில் உள்ள பல் மருத்துவமனைக்கு செல்லுங்கள். அங்கு உங்கள் ஈறுகள் சம்பத்தப்பட்ட பிரச்சனைகளும் குணமாகும்.
புகைபிடித்தல் உங்கள் பற்களை சேதப்படுத்தும், மேலும் பற்களில் பிளேக் மற்றும் பாக்டீரியாக்களின் அதிகரிப்பு போன்ற வாய்வழி பிரச்சனைகளை உருவாக்கும் அதிக ஆபத்தை உருவாக்குகிறது.
தினசரி இரண்டு முறை பல் துலக்குதல் மற்றும் மவுத்வாஷை தவறாமல் பயன்படுத்துவது வாயில் துர்நாற்றம் மற்றும் மஞ்சள் கறைகளை போக்க உதவுகிறது.