EPFO Update: மோடி அரசாங்கம் 2022-23 நிதியாண்டிற்கு 8.15 சதவீத வட்டியை அளிப்பதாக முன்னர் அறிவித்தது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வட்டி விகிதமாகும்.
ஒவ்வொரு மாதமும் பணியாளர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்கிறார்கள். பணியாளர் செலுத்தும் அதே தொகையை முதலாளி / நிறுவனமும் செலுத்துகின்றன. இது மறைமுகமாக பணியாளர்களுக்கு எதிர்காலத்திற்கான ஒரு நல்ல சேமிப்பாக அமைகின்றது. மிகவும் பாதுகாப்பான, நல்ல வருமானத்தை அளிக்கக்கூடிய ஒரு முதலீட்டு திட்டமாக இது உள்ளது.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தை (EPS) நிர்வகிக்கிறது. அலுவலக பணிகளில் இருக்கும் பெரும்பான்மையானோருக்கு மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு இபிஎஃப் கணக்கில் பங்களிக்கப்படுகின்றது.
இப்போது இபிஎஃப் ஊழியர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கப் போகிறது. இந்த செய்திக்காக, பிஎஃப் சந்தாதார்ரகள் மிகுந்த ஆவலுடன் காத்திருகிறார்கள். ஊழியர்களின் பிஎஃப் வட்டித்தொகை விரைவில் அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஃப் ஊழியர்களின் இபிஎஃப் (EPF) கணக்கில் மத்திய அரசு 8.15 சதவீத வட்டிக்கான தொகையை டெபாசிட் செய்யும். இது சந்தாதாரர்களின் கணக்கில் இருக்கும் தொகைக்கு ஏற்ப மாறுபடும்.
உதாரணமாக, ஒருவரது கணக்கில் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால், 8.15 சதவீத வட்டியில் அவருக்கு சுமார் ரூ.41,000 கிடைக்கும். ஊழியரின் பிஎஃப் கணக்கில் ரூ.6 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால், சுமார் ரூ.50 ஆயிரம் வட்டியாக டெபாசிட் செய்யப்படும்.
EPF கணக்கில் அரசாங்கம் எவ்வளவு தொகையை செபாசிட் செய்துள்ளது என்பதை அறிய நீங்கள் எங்கும் அலைய வேண்டியது இல்லை. பிஎஃப் சந்தாதாரர்கள் உமங் செயலியை விரைவில் பதிவிறக்கம் செய்து, வீட்டில் இருந்தபடியே தங்கள் கணக்கில் உள்ள தொகையை (EPF Balance) சரிபார்க்கலாம்.
EPFO இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் ( epfindia.gov.in) சென்றும் உங்கள் கணக்கில் உள்ள தொகையை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
மிஸ்டு கால் மூலம் பிஎஃப் இருப்பை அறிய, கணக்கு வைத்திருப்பவரின் மொபைல் எண்ணை இபிஎஃப்ஓ -வில் பதிவு செய்ய வேண்டும். பிஎஃப் சந்தாதாரர் மிஸ்டு கால் மூலம் இருப்புத் தகவலைப் பெற பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து, உங்கள் மொபைலுக்கு எஸ்எம்எஸ் மூலம் கணக்குத் தகவல் வரும்.
எஸ்எம்எஸ் மூலம் பிஎஃப் இருப்பை அறிய, இபிஎஃப்ஓ -இல் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இதற்கு, EPFO UAN LAN என்று டைப் செய்ய வேண்டும். இங்கு LAN என்றால் மொழி என்று பொருள்.