வெந்தயம் சாப்பிடுவதன் மூலம் பல நோய்களைத் தவிர்க்கலாம்

வெந்தயம் விதைகள் நம் உணவில் சுவை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். காலையில் வெந்தயம் சாப்பிடுவதன் மூலம் பல நோய்களைத் தவிர்க்கலாம். இது தவிர, பிற சுகாதார நன்மைகளும் வெந்தைய விதைகள் மூலம் கிடைக்கிறது.
  • Jan 23, 2020, 17:34 PM IST

வெந்தயம் விதைகள் நம் உணவில் சுவை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். காலையில் வெந்தயம் சாப்பிடுவதன் மூலம் பல நோய்களைத் தவிர்க்கலாம். இது தவிர, பிற சுகாதார நன்மைகளும் வெந்தைய விதைகள் மூலம் கிடைக்கிறது.

1 /5

நீரிழிவு நோயாளிகளுக்கும் இது பெருமளவு பயனளிக்கிறது. ஆம், சர்க்கரை நோயாளிகள் தினமும் வெந்தயத்தை உட்கொள்வதால் அவர்களது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியும்.

2 /5

அமிலத்தன்மை உள்ளவர்கள், உங்கள் தினசரி உணவிற்கு பிறகு வெந்தய விதைகளை சாப்பிடலாம். இதை உட்கொள்வது உடனடியாக விளைவைக் காட்டத் தொடங்கும்.

3 /5

நீங்கள் உங்கள் எடையைக் குறைக்க விரும்பினால், வெந்தயம் விதைகள் இதற்கும் பயனளிக்கும், இதற்காக நீங்கள் வெறும் வயிற்றில் வெந்தயத்தை உட்கொள்ள வேண்டியிருக்கும். இது சாப்பிடுவதற்கு சற்று கசப்பாகத் தோன்றும் ஆனால் இது உங்கள் ஆரோக்கியத்திற்கு சரியான தீர்வு என்பதை நீங்கள் மறந்துவிட கூடாது.

4 /5

மாதவிடாய் சரியாக வராமல் இருப்பது அல்லது இடைவிடாமல் நின்றுவிடுதல் போன்ற பெண்கள் தொடர்பான பிரச்சினைகள், இதன் மூலம் நீங்கும். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, 1 டீஸ்பூன் வெந்தயம் விதைகளை இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் எழுந்து அதனை வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும்

5 /5

உங்கள் சமையலறையில் பல வகையான மசாலாப் பொருட்கள் காணப்படுகின்றன, அவை அனைத்தும் நமது ஆரோக்கியத்தை காக்கும் என கூறிவிட முடியாது. ஆனால் உங்கள் சமையல் அறையில் உள்ள ஒரு சிறய பொருளான வெந்தயம் நம் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?