தற்போது இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது. அந்நாட்டுக்கு எதிராக டி-20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் பங்கேற்ற உள்ளது.
நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி (Team India), அந்நாட்டுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. நியூசிலாந்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 16 உறுப்பினர்களைக் கொண்ட டீம் இந்தியாவை பிசிசிஐ அறிவித்துள்ளது. காயமடைந்த ஷிகர் தவானுக்கு மாற்றாக பிருத்வி ஷா ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல அவருக்கு ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 தொடருக்கு தவானுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் விளையாடுவார்.