Kerala Christmas Bumper lottery | கிறிஸ்துமஸ், புத்தாண்டு கேரள பம்பர் லாட்டரி டிக்கெட் இன்னும் விற்பனை லேட்டஸ்ட் அப்டேட்
Kerala Christmas Bumper lottery Ticket கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஸ்பெஷல் கேரளா பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை இன்னும் தொடங்கப்படவில்லை. அது ஏன் என்பதற்கான பின்னணி தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
கேரளா பம்பர் லாட்டரி (Kerala Bumper Lottery) டிக்கெட் வாங்க இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அரசே ஏற்று நடத்துவதால் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என்ற காரணத்தால், கேரளா பம்பர் லாட்டரி டிக்கெட் வாங்குவதற்கு எல்லா மாநில மக்களிடமும் மவுசு அதிகம் இருக்கிறது. அண்மையில் பூஜா பம்பர் லாட்டரி பரிசு அறிவிக்கப்பட்டது. 12 கோடி ரூபாய் முதல் பரிசை கேரளாவைச் சேர்ந்தவரே தட்டிச் சென்றார்.
ஆனால், அன்றைய தினம் வெளியாக வேண்டிய கிறிஸ்துமஸ், புத்தாண்டு கேரளா பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை தொடங்கவில்லை. அரசு சார்பிலும் டிக்கெட் விநியோகம் செய்யப்படவில்லை. இது லாட்டரி பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், டிக்கெட்விநியோகம் ஏன் தொடங்கவில்லை என்ற கேள்வியும் எழுந்தது. அந்த கேள்விக்கான பதில் இப்போது வெளியாகியுள்ளது.
அதாவது, ஆண்டுதோறும் கேரள பம்பர் லாட்டரி விற்பனை 6 முறை மட்டுமே நடத்தப்படுகிறது. தினசரி மற்றும் மாதம், வார அடிப்படையில் டிக்கெட்டுகள் எப்போதும்போல் விற்பனை செய்யப்படும். பம்பர் லாட்டரிகளுக்கு மட்டும் பரிசுத் தொகை மிக அதிகமாக இருக்கும். அதில் ஓணம் பண்டிகைக்கு மட்டும் அதிகபட்சமாக 25 கோடி ரூபாய் முதல் பரிசு வழங்கப்படும். கேரளா ஓணம் ஸ்பெஷல் பம்பர் லாட்டரி என்ற பெயரில் டிக்கெட் விநியோகம் நடக்கும்.
மற்றபடி, தீபாவளி, பூஜா, கிறிஸ்துமஸ் புத்தாண்டு ஸ்பெஷல் பம்பர் லாட்டரி எல்லாம் முதல் பரிசு 20 கோடி ரூபாய் அல்லது அதற்கு குறைவான பரிசுத் தொகை நிர்ணயிக்கப்படும். இம்முறையும் புத்தாண்டு கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேரளா பம்பர் லாட்டரி டிக்கெட்டுக்கு முதல் பரிசாக 20 கோடி ரூபாய் கேரளா அரசு நிர்ணயித்தது. ஆனால், 5000, 2000, 1000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைத்துவிட்டது. மேலும், லாட்டரி டிக்கெட் ஏஜெண்டுகளுக்கான கமிஷன் தொகையையும் குறைத்திருக்கிறது கேரள மாநில அரசு.
இது கேரளா லாட்டரி விற்பனையாளர்கள் மற்றும் ஏஜெண்டுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அரசு அச்சடித்துக் கொடுத்த கிறிஸ்துமஸ், புத்தாண்டு லாட்டரி டிக்கெட்டுகளை அவர்கள் வாங்க மறுத்துவிட்டனர். சுமார் 12 லட்சம் லாட்டரி டிக்கெட்டுகளை அரசு அச்சடித்திருந்தது.
இதனை வாங்க மாட்டோம் என அறிவித்த லாட்டரி டிக்கெட் ஏஜெண்டுகள் மற்றும் விற்பனையார்கள் பரிசுத் தொகை, கமிஷன் ஆகிய இரண்டையும் குறைக்கும் முடிவையும் கைவிட வேண்டும் என அழுத்தம் திருத்தமாக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இது குறித்த ஆலோசனை நடத்திய கேரளா மாநில அரசு புத்தாண்டு கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் பம்பர் லாட்டரி (Kerala Christmas Bumper Lottery) டிக்கெட்டுக்களுக்கு பரிசு எண்ணிக்கையை குறைக்க மாட்டோம், ஏஜெண்ட் கமிஷனையும் குறைக்க மாட்டோம் என அறிவித்துள்ளது. இதனால், புதிய லாட்டரி டிக்கெட்டுகள் அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே அச்சடித்த 12 லட்சம் லாட்டரிகள் அப்படியே அழிக்கப்பட உள்ளன. இதனால் கேரளா அரசுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே அச்சடித்த லாட்டரிகளுக்கான செலவு, புதிதாக அச்சடிக்கும் லாட்டரிகளுக்கான செலவு என ஒரு பம்பர் லாட்டரிக்கு இரண்டு முறை லாட்டரி டிக்கெட்டுகளை அச்சடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் இப்போது சபரிமலை சீசன் நடந்து வருவதால் இந்த நேரத்தில் தான் லாட்டரி டிக்கெட்டுகள் அமோகமாக விற்பனையாகும். ஆனால், 2 வார காலம் ஏற்கனவே வீணாக போய்விட்டது. அதனால் புத்தாண்டு கிறிஸ்துமஸ் லாட்டரி விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் விற்பனை இலக்கை எட்ட முடியுமா? என்ற சந்தேகமும் கேரள அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.
எனினும் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி டிக்கெட் அச்சடிக்கும் பணி மிக வேகமாக நடந்து வருவதால் இன்னும் ஒருசில தினங்களில் அவை கடைகளில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது என லாட்டரி ஏஜெண்டுகள் தெரிவிக்கிறார்கள்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு அதிகம் புத்தாண்டு கிறிஸ்துமஸ் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையாகுமா? என்ற சந்தகேம் தங்களுக்கே இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.