டெவோன் கான்வே காயம் காரணமாக ஐபிஎல் 2024 ல் முதல் பாதியில் விளையாடமாட்டார். அவருக்கு பதிலாக இருக்கும் 4 பிளேயர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே காயம் காரணமாக ஐபிஎல் 2024 தொடரின் முதல் பாதியில் விளையாடமாட்டார்.
அதனால் அவருக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ருதுராஜ் கெய்க் வாட்டுடன் களமிறங்கப்போகும் மற்றொரு வீரரை சிஎஸ்கே சஸ்பென்ஸாக வைத்துள்ளது.
டெவோன் கான்வேவுக்கு பதிலாக சிஎஸ்கே அணி மாற்று வீரர் யாரையும் அறிவிக்கவில்லை. அந்த அணி ஏற்கனவே ரிசர்வ் பிளேயர்களை ஏலத்தின்போதே எடுத்து வைத்துள்ளது.
எல்லா இடங்களுக்கும் செட்டாகும் வகையில் ஒவ்வொரு பிளேயருக்கும் ரிசர்வ் பிளேயரை ஏலத்தின்போதே எடுத்து வைத்திருப்பது தான் சிஎஸ்கே அணியின் ஹைலைட். அதன்படி பார்த்தால், ருதுராஜ் கெய்க்வாட்டுன் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இப்போது அருக்கும் ஸ்குவாடில் இருந்து 4 பிளேயர்களை ஓப்பனிங் இறக்கலாம்.
நியூசிலாந்து அணியின் அதிரடி பிளேயர் டேரி மிட்செல் ஓப்பனிங் இறங்க வாய்ப்பு இருக்கிறது. அவரை இந்த ஏலத்தின்போது சிஎஸ்கே அணி 14 கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்து வாங்கியிருக்கிறது. அவர் எந்த இடத்திலும் விளையாடக்கூடியவர்.
அடுத்ததாக நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திராவும் சிஎஸ்கே அணியில் தான் இருக்கிறார். அவரும் ஓப்பனிங் விளையாடகூடியவர். கடந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பாக பேட்டிங் விளையாடி முத்திரை பதித்திருக்கிறார்.
ஷாயிக் ரசித் என்ற இளம் வீரரும் சிஎஸ்கே அணியில் இருக்கிறார். அவரும் ஓப்பனிங் பேட்டிங் விளையாடக்கூடியவர். அவரின் பேட்டிங் திறமையை பார்த்தே சிஎஸ்கே அணி சாயிக் ரசிதை தட்டி தூக்கியது.
எல்லா வீரர்களையும் விட இந்திய அணியின் மூத்த பேட்ஸ்மேன் ரஹானே கூட ஓப்பனிங் இறங்க வாய்ப்புள்ளது. அவர் நிதானமாகவும் ரன்ரேட்டு ஏற்பட ஸ்டைக்கை ரொடேட் செய்யக்கூடியவர் என்பதால் அவர் கூட ருதுராஜ் கெய்க்வாட்டுன் சிஎஸ்கே அணிக்காக ஓப்பனிங் இறங்க வாய்ப்பு இருக்கிறது.