கருஞ்சீரகம் ஆயுர்வேத சிகிச்சை மற்றும் மருந்துகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வைட்டமின்கள், ஆக்சிஜனேற்றிகள் நிறைந்த கருஞ்சீரகம், உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
கருஞ்சீரகத்தின் நன்மைகள், இதனை எடுத்துக் கொள்வதால், எந்தவிதமான உடல்நல பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெறலாம் என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.
கருஞ்சீரகத்தின் மருத்துவ பண்புகளும் ஊட்டச்சத்துக்களும், ரத்த சக்க்ரை அளவை சீராக்கி, நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகின்றன.
அழற்ச்சி எதிர்ப்பு பண்புகள், ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த கருஞ்சீரகம், உடல் பருமனை குறைப்பதற்கான மிகச் சிறந்த மூலிகை.
கருஞ்சீரகம் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, தைராய்டு ஹார்மோன் சமநிலமையின்மையை போக்கி நிவாரணம் அளிக்கிறது.
ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த கருஞ்சீரகம், உடலுக்கு தீர்வு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடி புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
கருஞ்சீரகத்தில் உள்ள ஆண்டி வைரல், ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள், பலவிதமான சரும பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.