எந்த வங்கி எவ்வளவு வட்டி தருகிறது? 9.60% FD வட்டி தரும் வங்கி எது தெரியுமா?

NBFCs And High FD Interest Rates: உழைத்து சேமித்த பணத்தை நிலையான வைப்புத்தொகையான FD இல் முதலீடு செய்து பாதுகாப்பாக பத்திரப்படுத்தும் மக்கள், உத்தரவாதமான வருமானத்தையும் பெறுகிறார்கள்...  

பாதுகாப்பான முதலீட்டாக முதலீடு செய்யும் மக்களுக்கு பெரிய வங்கிகளை விட, மிக அதிகமான வட்டியை வழங்கும் வங்கிகளின் பட்டியலில் சிறு வங்கிகளே முன்னணியில் உள்ளன. அந்த நிதி நிறுவனங்களின் பட்டியல் இது...  

1 /8

சிறிய வங்கி, பெரிய வருமானம் கொடுக்கும் வங்கிகளில் பிரபலமான பெரிய வங்கிகள், தனியார் வங்கிகள் இடம் பெறவில்லை.  நிலையான வைப்புத்தொகைக்குக் 9.60% வரை வட்டி தரும் வங்கிகள், முதலீட்டை பாதுகாப்பதோடு அதிக வட்டியும் தருவதால் மக்கள் சிறு நிதி நிறுவனங்களை நம்பி முதலீடு செய்ய விரும்புகின்றனர்

2 /8

6, 7 அல்லது 8 சதவிகித வட்டிக்கு பதிலாக 9.6 சதவிகிதம் வரை வட்டி விகிதங்கள் கொடுக்கும் NBFCகளின் பட்டியலில் முதலில் இடம் பெறும் வங்கி எது தெரியுமா?

3 /8

சூர்யோதய் சிறு நிதி வங்கி: FD இல் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால் சூர்யோதாய் சிறு நிதி கொடுக்கும் வட்டி விகிதத்தைத் தெரிந்துக் கொள்ளுங்கள். Suryoday Small Finance Bank Limited, எஃப்டிக்கு அதிக வட்டி கொடுக்கிறது. 9.60 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. 5 ஆண்டுகளுக்கு FD செய்தால், மூத்த குடிமக்களுக்கு 9.10 சதவீதம் முதல் 9.60 சதவீதம் வரை வட்டி கிடைக்கும்.

4 /8

யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி:  யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Unity Small Finance Bank Limited) 1001 நாட்களுக்கான FDக்கு பொதுக் குடிமக்களுக்கு 9 சதவீத வட்டியையும் மூத்த குடிமக்களுக்கு 9.50 சதவீத வட்டியையும் வழங்குகிறது. சாதாரண மக்களுடன் ஒப்பிடும்போது மூத்த குடிமக்களுக்கு 0.5 சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கும்

5 /8

ஃபின்கேர் சிறு நிதி வங்கி: இதேபோல், ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில், 1000 நாட்களுக்கு FDக்கு 8.51 சதவீத வட்டி கிடைக்கும். மூத்த குடிமக்கள் இந்த வங்கியில் FD செய்தால் அவர்களுக்கு 9.11 சதவீத வட்டி கிடைக்கும்.

6 /8

ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி: இந்த சிறு நிதி வங்கியில், 888 நாட்களுக்கான FDக்கு 8.50 சதவீத வட்டியைப் பெறுகிறார்கள், மூத்த குடிமக்கள் அதே காலத்திற்கு 9 சதவீதம் வரை வட்டி பெறுகிறார்கள்.

7 /8

ESAF சிறு நிதி வங்கி: ESAF ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கும் குறைவான வைப்புத் தொகைக்கு 8.50 சதவீத வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 9 சதவீத வட்டியும் கிடைக்கும்

8 /8

பொறுப்புத் துறப்பு:  இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை