நீரிழிவு நோயாளிகளுக்கு நைட் டைம் டிப்ஸ்! இந்த 5 வேலையை செய்தால் சர்க்கரை அளவு அதிகரிக்காது!

 Blood Sugar Control : இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க, நீரிழிவு நோயாளிகள் பல நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே அதைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். 

Tips To Diabetic Patient : இரவில் தூங்கும் முன் இந்த குறிப்புகளை  பின்பற்றினால், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம். 

1 /7

மிகவும் தீவிரமான பிரச்சனையான சர்க்கரை நோயை வேரோடு அழிக்க வேண்டும் என்று நினைத்தாலும், அதை ஒருபோதும் அழிக்க முடியாது. அழையா விருந்தாளியான சர்க்கரை நோயை கட்டுப்படுத்தத்தான் முடியும். அதற்கு இரவு நேரத்தில் செய்ய வேண்டிய வேலைகள் என்ன என்பதைத் தெரிந்துக் கொள்வோம்

2 /7

சர்க்கரை அதிகமாக இருப்பவர்கள், இரவு நேரத்தில் கடைபிடிக்க விஷயங்களில் முக்கியமானது விரைவில் இரவு உணவை உண்பது தான். நேரம் கழித்து உண்பதும், அதிக அளவில் உண்பதையும் தவிர்க்க வேண்டும்

3 /7

இரவு நேரத்தில் தேநீர் அல்லது காபி குடிக்கக்கூடாது. ஏனென்றால் அது தூக்கத்தை கெடுக்கும், நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 8 மணி நேர தூக்கம் அவசியம் என்பதால், இரவில் தேநீர், காபியை தவிர்க்கவும்

4 /7

உணவு உண்ணுவதில் கவனக்குறைவாக இருந்தால், அது சர்க்கரை அளவை அதிகரிக்கும். எனவே, இரவு முழுவதும் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க, இரவு உணவில் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் கலவையைச் சேர்க்கவும்.

5 /7

இரவு உணவுக்கு பிறகு சிறிது நேரம் நடப்பது உடலுக்கு நல்லது. இது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்

6 /7

உறங்கச் செல்வதற்கு முன் தியானம் அல்லது சுவாசப் பயிற்சிகளையும் செய்யலாம். இது மன அழுத்தத்தைக் , குறைக்கவும், நல்ல தூக்கத்தைப் பெறவும் உதவுகிறது. ஆந்த உறக்கம், சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவும்.

7 /7

காலையில் வெந்தயத்தை உண்பது நல்லது. அதனால், நீரிழிவு நோயாளிகள் இரவின் உறங்கச் செல்வதற்கு முன்னதாக, வெந்தயத்தை நீரில் ஊற வைப்பதை மறக்க வேண்டாம்