2021, டிசம்பர் 11 சனிக்கிழமையன்று, பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தின் பல்ராம்பூரில் சரயு நஹர் தேசியத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். திட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்.
இத்திட்டத்தின் பணிகள் 1978 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போதிலும், பட்ஜெட், துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் போதுமான கண்காணிப்பு உட்பட பல காரணங்களால் கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக நிலுவையில் இருந்த திட்டம் முடிக்கப்பட்டு, இன்று நாட்டுக்கு அர்பணிக்கப்படுகிறது.
ALSO READ | நதிகளும், வியக்க வைக்கும் அவற்றின் பல்வேறு பரிணாமங்களும்...
விவசாயிகளின் நலன் மற்றும் அதிகாரமளித்தலுக்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நீண்டகால நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பு ஆகியவை இத்திட்டத்தில் அதிக கவனம் செலுத்தியது. இதன் விளைவாக, 2016 ஆம் ஆண்டில், பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாயி யோஜனா திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதை முடிக்க இலக்கு கொண்டு திட்டம் கொண்டுவரப்பட்டது.
சரயு நஹர் தேசிய திட்டம் மொத்தம் 9800 கோடி ரூபாய் ஆகும்., இதில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 4600 கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய கால்வாய்களை அமைப்பதற்கும், திட்டத்தில் உள்ள முக்கியமான இடைவெளிகளை நிரப்புவதற்கும், முந்தைய நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்ப்பதற்கும் புதிய நிலம் கையகப்படுத்துவதற்கு புதுமையான தீர்வுகள் காணப்பட்டன. இத்திட்டத்தின் மீது மீண்டும் கவனம் செலுத்தியதன் விளைவாக, சுமார் நான்கு ஆண்டுகளில் மட்டுமே இத்திட்டம் முடிக்கப்பட்டது.
இப்பகுதியின் நீர் ஆதாரங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக, ககாரா, சர்யு, ரப்தி, பங்கங்கா மற்றும் ரோகினி ஆகிய ஐந்து நதிகளை இணைக்கும் திட்டமும் இந்த திட்டத்தில் அடங்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இத்திட்டம் 14 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு பாசனத்திற்கு உறுதியளிக்கப்பட்ட தண்ணீரை வழங்குவதோடு, 6200க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 29 லட்சம் விவசாயிகள் பயனடையும். இது கிழக்கு உத்தரபிரதேசத்தின் ஒன்பது மாவட்டங்களான பஹ்ரைச், ஷ்ரவஸ்தி, பல்ராம்பூர், கோண்டா, சித்தார்த்நகர், பஸ்தி, சந்த் கபீர் நகர், கோரக்பூர் மற்றும் மஹராஜ்கஞ்ச் ஆகிய மாவட்டங்களுக்கு பயனளிக்கும்.
இத்திட்டத்தில் ஏற்பட்ட காலதாமதத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இப்பகுதி விவசாயிகள், மேம்படுத்தப்பட்ட நீர்ப்பாசனத் திறனால் பெரும் பயனடைவார்கள். அவர்கள் இப்போது பெரிய அளவில் விவசாயம் செய்ய முடியும்