கெட்ட காற்றை சுவாசித்தால் இவ்வளவு ஆபத்தா?

இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்த வண்ணம் உள்ளது, காற்று மாசுபாட்டினால் பல்வேறு ஆரோக்கிய சீர்கேடுகள் உருவாகும்.

 

1 /4

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி கடந்த வெள்ளிக்கிழமையன்று காலை 9:30 மணியளவில் டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரக்குறியீடு(AQI) 426 ஆக இருந்தது.  AQI அளவு 400க்கு மேல் இருந்தால் அது ஆபத்தானது, ஆரோக்கியமான மக்கள் பாதிப்பிற்குள்ளாவார்கள் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான் பாதிப்பு உண்டாகும்.  

2 /4

வியாழக்கிழமை நிலவரத்தின்படி மாலை 4 மணியளவில் AQI அளவு 450 ஆக இருந்தது, இது தீவிரமான நிலையாகும்.  இதன் காரணமாக நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா பகுதிகளில் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை பள்ளிக்கு வரவேண்டாம் என்றும், ஆன்லைனில் வகுப்புகளை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.  

3 /4

காற்று மாசுபாட்டின் அதிதீவிர நிலை பல்வேறு ஆரோக்கிய சீர்கேடுகளை உண்டாக்கும் குறிப்பாக இது குழந்தைகளில் பலவித பாதிப்புகளை ஏற்படுத்தும்.  

4 /4

டெல்லி மக்களை கார்களின் பயன்பாட்டை குறைக்கவும், முடிந்தளவு வீட்டிலேயே இருந்து வேலை பார்க்கவும், விறகுகள் எரிப்பதை குறைக்குமாறும் அரசு அறிவுறுத்தியுள்ளது.