அடி வயிற்று தொப்பையை குறைக்க இந்த ஒரு காய்யை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்!

Weight Loss Tips: பலருக்கு உணவுமுறை காரணமாக உடல் எடை அதிகரிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், தினசரி உணவில் சில காய்கறிகளை சேர்த்து கொள்வது உடல் எடையை குறைக்க உதவும்.

 

1 /5

ஒரு முறை உடல் எடை அதிகரித்து விட்டால் அதனை குறைப்பது சாதாரண விஷயம் இல்லை. அதற்கு கடும் உடற்பயிற்சிகள் தேவைப்படுகிறது.  சில பச்சை காய்கறி சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்சனையை எளிதாக சமாளிக்க முடியும்.   

2 /5

கோவைக்காய் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று முன்னோர் காலத்தில் இருந்தே கூறப்பட்டு வருகிறது.  கோவைக்காய் சாப்பிடுவதற்கு சுவையாக மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் பல்வேறு நன்மை பயக்கும்.   

3 /5

வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கோவைக்காய்யில் உள்ளன. இவை இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று தான் இந்த கோவைக்காய்.   

4 /5

மேலும் சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும் என்று கூறப்படுகிறது. நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இது நீரிழிவு நோய் வராமல் தடுக்க உதவும்.  

5 /5

கோவைக்காய் பித்தம், ரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன் படும். மேலும் கோவைக்காயில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ஏராளமாக காணப்படுகின்றன. இவை இதயப் பிரச்சனை வராமல் தடுக்கும்.